எண்ணற்ற ஆசையிருந்தாலும் | Love and Life Quotes in Tamil-01
301.எனை எரித்தாலும்
அணைக்க விரும்பாத
அழகிய தீ
நீ...!
302.எண்ணற்ற
ஆசையிருந்தாலும்
உனை கண்டதும்
மனம்
நீ மட்டும்
போதுமென்கிறது
303.இரை தேடும்
பறவையாய்
உனை தேடுது
இதயம்
304.என் அன்பை
சுவாசிக்கும்
உயிராகவே இருந்திடு
உன் சுவாசத்தில்
கலந்த உறவாகவே
நானும் வாழ்ந்திடுவேன்
305.நீ நான்
நம் பேரன்பு
சிறு உலகமென்றாலும்
நிறைவான அழகிய
வாழ்க்கை
306.எல்லைக்குள்
வைத்திருந்தாலும்
நீயென்று வரும்போது
மனம் எல்லையை
தாண்டுகிறது
உனக்காக நான்
307.இதுவும்
கடந்துபோகும்
என்றாலும் நீயின்றி
எதுவும் கடந்திடாது
என்பதே உண்மை
308.அலங்கோலம்
கூட அழகுதான்
நீ கலைத்து
விளையாடும்
போது (கூந்தல்)
309.என் கண்ணீரில்
புரியாத உணர்வா
உனக்கு என்
கவிதைகளில்
புரிந்துவிட போகிறது
310.பயணம் முன்நோக்கி
தொடர்ந்தாலும்
மனம் பின்நோக்கியே
நகர்கிறது
நீ வருவாயென
311.காலங்கள் கடந்தாலும்
உனக்காக
என் மனக்கதவு
திறந்தே இருக்கும்
நீயும் எனக்காக
காத்திருக்கின்றாய்
என்ற நம்பிக்கையில்
312.உயிர்வரை சென்று
சுகமாய் எரிக்கும்
இவ் வெப்பம்
போதும்
பல நாட்கள்
நான் குளிர்
காய்ந்திட
313.காற்றாய் தீண்டும்
உன் நினைவில்
கரைகின்றது
என் நிமிடங்களும்
அழகாய்
314.பாசம் காட்ட
பல உறவுகள்
எனை சுற்றிருந்தாலும்
என்னிதயத்தை
அலங்கரிப்பது
பட்டாம்பூச்சியாய்
நீயே
315.பல நேரங்களில்
மையில் கரைக்கின்றேன்
சில நேரங்களில்
விழிகளில் விதைக்கின்றேன்
உன் மீதுள்ள
காதலை
316.விழியோடு
சேர்ந்த இமைப்போல்
இதய துடிப்போடு
கலந்திருப்பது நீ
என் சுவாசமாய்
சேமிப்பென்று
எதுவுமில்லை
நம் நினைவுகளை
தவிர
317.எங்கோ மறைந்திருந்து
மாயங்கள் செய்கின்றாய்
குழம்பி தவிக்கின்றேன்
தெளிவற்ற நீரில்
பிம்பமாய்
எங்கே நீயென்று
318.அன்பில் நிரப்புகிறாய்
மனதை என்றும்
வற்றாத
நிறைகுடமானது
நம் வாழ்க்கை
319.தடுத்த போதும்
நிறுத்த வில்லை
உனை எதிர்
பார்த்திருப்பதை
விழி
320.கரையை துரத்தும்
அலையாய் கடல்
தாண்டிய போதும்
துரத்துகிறது
உன் நினைவலைகள்
காற்றாய்
321.சோகங்ள்
உனதென்றாலும்
அதன் வலிகள்
எனக்கும் தான்
மனதில்
322.தொலைதூர
நிலவானாலும்
தொடும் தூரத்தில்
தானிருக்கின்றாய்
என் மனவானில்
323.எண்ணத்தின்
ஓசை நீயாக
கண்களுக்குள்
வண்ண கனவாய்
நாமே
324.சிறு இடைவெளிக்கு
பின் சந்தித்தாலும்
ஏனோ
நம் முதல்
சந்திப்பை போலவே
நாணம் கலந்த
தவிப்பு
325.என் எல்லா
செயல்களிலும்
நீயே பிம்பமாகிறாய்
நீயின்றி நானில்லை
326.காற்றாய் வீசுகிறாய்
காதோடு பேசுகிறாய்
விழியலே
மொழி பகிர்ந்து
தென்றலாய் வருடியே
327.விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்
328.குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற
329.இருளான
இதய அறையிலும்
ஒளி பரவியது
நீ குடியேறியதால்
330.உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை





























