ஒருவரின் தேவை அறிந்து | Emotional Quotes in Tamil 4
46.ஒருவரின்
தேவை அறிந்து
அவர் கேட்காமலே
உதவி செய்வாயின்
நீங்களும் கடவுளே
47.சிலரிடம்
சில விஷயங்களை
புரிய வைக்க
கஷ்டபடுவதை விட
சிரித்துவிட்டு
கடந்து செல்வது
நல்லது
48.நற்குணங்களை
தகுதியாக்கிக் கொண்டு
நான் இப்படி
தான்
என்று நிலைத்து
நில்லுங்கள்
புரிபவர்கள் புரிந்து
வருவார்கள்
புரியாதவர்கள் விலகி
செல்வார்கள்
எதுவாகினும் நட்டம்
நமக்கில்லை
49.நேற்றைய இழப்பை
மறந்து
நாளைய வெற்றியை
நோக்கி
இன்றைய பொழுதை
தொடங்குவோம்
50.அன்பாக இரு
அனைவரிடமும்
அடிமையாக இருக்காதே
யாரிடமும்
51.ஏமாற்றுபவர்கள்
கொண்டாடுவதும்
ஏமாறுபவர்கள்
திண்டாடுவதும்
மாறாது
உண்மையான அன்புக்கு
பஞ்சம் இருக்கும்
வரை
52.ஒரு மனிதனுக்கு
பலமும் பலவினமும்
அவருடைய மனச
பொருத்து தான்
இருக்கு
53.புதிய பாதையில்
பயணிக்க ஆசை
என் கனவுகளுடன்
மட்டும்
54.நாம் தடுமாறும்
போதெல்லாம்
தோள் கொடுக்கும்
உறவே இறுதிவரை
நிலைத்திருக்கும்
55.நீ மற்றவர்களை
நேசிக்கும் முன்
உன்னையே நீ
நேசித்து பார்
வாழ்க்கை
அழகாக தெரியும்
56.கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்க முடியாமல்
உணர்வின்றியே
உதித்துக்கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
57.காலம் உன்னை
மாற்றிட
பல முயற்சிகள்
எடுக்கும்
தோற்று விடாதே
காலமே ஒரு
நாள் மாறிவிடும்
58.ஏமாற்றங்கள் பழகிவிட்டது
என்பதற்காக
ஏமாந்து கொண்டே
இருப்பது
முட்டாள்தனம்
59.எல்லா விசயங்களிலும்
நேருக்கு நேர்
போய் தான்
ஜெயிக்க வேண்டுமென்றல்ல
சில விசயங்களில்
விலகி நின்றாலே
ஜெயிச்ச மாதிரி
தாங்க
பலருக்கும் நிம்மதி
கொடுத்த திருப்தி
60.எதையும் மறக்க
முயற்சித்து
நிம்மதிய இழக்காதிங்க
அதை அதை
அப்படியே
விட்டுவிடுங்கள்
காலம் மாற்றிவிடும்
61.உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்
உலகில் உன்னை
விட
வலிமையானவர் யாருமில்லை
62.அளவோட இருந்தால்
மட்டுமே அதுக்கு
மதிப்பு
அன்பா இருந்தாலும்
63.இவ்வாழ்வு எப்போதும்
அழுது தீர்ப்பதற்காக
அல்ல கொண்டாடி
மகிழ்வதற்காகவும் தான்
64.எல்லைமீறிய கோபத்திலும்
கையிலிருக்கும் செல்போனை
விட்டெறிய கூடாது
என்றிருக்கும் நிதானம்
வார்த்தைகளில்
இருப்பதில்லை நம்பலருக்கும்
65.உன் சொற்கள்
எப்படி
இருக்கிறதோ அந்த
அளவுக்கு தான்
உனக்கான மதிப்பும்
இருக்கும்
66.துணிச்சல் என்பது
ஒருவரை பேச
விடாமல்
செய்வது அல்ல
அனைவரையும்
நம்மை பற்றி
பேச செய்வது
67.சில தருணங்களில்
பலமாகவும்
சில தருணங்களில்
பலவீனமாகவும்
அமைந்து விடுகிறது
பிறர் மேல்
நாம் வைக்கும்
நம்பிக்கை
68.உன்னை செதுக்கி
கொண்டே இரு
சிலையாகவில்லையானாலும் சரி
கல்லாய் இருக்காதே
69.பலர் விரும்பியும்
கிடைக்காத வரம்
நிம்மதியான உறக்கம்
70.நமக்கான
ஆறுதல் என்பது
நம்மிடம் தான்
உள்ளது
மறந்து போவதும்
கடந்து செல்வதும்
























