தாமதித்து தவிக்கவிடாதே | One sided love quotes in Tamil - 04
241.எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்
உனக்காக கிறுக்கும்போது
மட்டுமே மனமும்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கின்றது
242.குளத்தில் நீந்தும்
தாமரையைபோல்
மன ஓடையில்
நீந்துகின்றது
உன் நினைவு
243.உன்
தோள்சாய
சோகங்களும்
சொப்பனமாய்
கலையும்
244.வில்லின்றி
எய்தாய்
விழி அம்பை
துளைத்தது சுகமாய்
இதயத்தை
245.அடம்பிடிக்கும்
குழந்தையாய்
அடங்க மறுக்கின்றது
உன் நினைவு
246.தாமதித்து
தவிக்கவிடாதே
தாங்காது
இதயம்
247.எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
248.காத்திருந்த
கனமான நிமிடமெல்லாம்
காணாமல் போனது
கண்கள் உனைக்காண
249.விலகாத அணைப்பு
மௌனங்கள் பேசும்
காதல் கரைகின்ற
இரவில்
தொடர்ந்திட வேண்டும்
250.இரவை
பல வண்ணங்கள்
அழகாக்கி
கொண்டிருந்தாலும்
உன்னை காணும்வரை
என்மனம் இருளே
251.கரு மையும்
கவிதையாகும்
உன் கண்கள்
ரசித்தால்...!
252.பேச வந்த
வார்த்தையெல்லாம்
ஓசையின்றி போனது
உன் விழிமொழியில்
மயங்கி...!
253.என்னில் நீயாகி
உன்னில் நானாகி
நம்முள் நாமானோம்
254.எண்ணமெல்லாம்
நீயாக
வண்ணவுலகில்
நான்...!
255.நெற்றியில் நீ
திலகமிட
கண்ணங்களும்
சிவந்தது நாணத்தில்
256.உன்னில்
தொலைந்தபின்னே
புன்னகைக்கவும்
கற்றுக்கொண்டேன்
257.விண்ணில்
உலாவரும்
நிலவாய்
என்னுள் உலாவருகின்றாய்
நீ...!
258.மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு
என்னுயிர் வாழ...!
259.எதையும்
ஆள வேண்டுமென்ற
ஆசையில்லை
உன் அன்பில்
ஆழ்ந்திருக்க
வேண்டுமென்ற
ஆசையை தவிர
260.சோலையில்
பூத்ததல்ல
உதிர மனச்சோலையில்
பூத்தது மரணம்வரை
மலர்ந்திருக்கும்
காதல் மலர்
261.நினைவே
நீயானபின்
மனதுக்கு
ஏது ஓய்வு
262.கரையோடு
உரையாடும்
அலைப்போல்
கடலிருக்கும்வரை
தொடர்ந்திட வேண்டும்
நம் உறவும்...!
263.உனக்காக
தவிப்பதுதான்
காதலென்றால்
சுகமாக ஏற்றுக்கொள்வேன்
காலமெல்லாம்...!
264.கையளவு
இதயத்திலேயே
சுகமாக சுமந்திருப்பவனுக்கு
கரங்களில் மட்டுமென்ன
சுமையாகவா
தெரியபோகிறேன்
265.நீ சொல்லும்
மிஸ் யூவில்
தொலைகிறேன்
நானும்...!
266.அலங்கரித்த போதும்
ஒளியிழந்து போனேன்
உன் பார்வை
படாததால்...!
267.காண்பதற்கு
தடைபோட்ட போதும்
மனதுக்கு தாழ்போட
முடியவில்லை
உள்ளம் உன்னையே
நினைக்குது...!
268.என் எண்ணங்களில்
உதயமான அழகிய
வண்ணங்களின் வானவில்லாய்
தான் என்
காதல்
269.பார்க்கும் தூரத்தில்
நீயில்லை என்றாலும்
உனை எதிர்
பார்த்திருப்பதை
நிறுத்தவில்லை
விழிகள்
270.சில கணம்
மூழ்கினாலும்
உன்னன்பில்
பல யுகம்
வாழ்ந்த மகிழ்வு