தொடர்வது பிடிக்கும் | True Love Quotes in Tamil-01
1.ஜன்னலை
தீண்டும் தென்றலாய்
உன்னன்பும்
மனதை தீண்ட
விழிகளும்
தேடுது உன்னை
2.இறந்திட
தைரியம் உண்டு
உன்னை இழந்திட
இல்லை
3.எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
என்னை நேரில்
பார்க்கும்போது
உன் கண்கள் பேசும்
மொழிதனை பார்க்கவே
என் கண்கள்
தவம் கிடைக்கின்றது கள்வனே
4.என் விழியில் விழுந்தவனே
உன்னை துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்
உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமல்
5.உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்
6.கடலலையை
ரசிக்க வந்தால்
நம் நினைவலைகள்
முந்தி கொள்கின்றது
7.தேடும் மனதை
ஏமாற்றியதில்லை
கண்ணெதிரே
வந்து விடுகின்றாய்
8.கரையாய்
ஒதுங்கிருந்தேன்
அலையாய்
தொடர்ந்தென்னை
கடலாய் அள்ளி
கொண்டாய்
அன்பில்
9.உன்
பொய்களையும்
ரசிக்கின்றேன்
நீ என்னை
அழகாய் வர்ணிக்கும்
போது கவிதையாக
10.தொடர்வது
பிடிக்கும்
உன்னை
நினைவிலும்
11.உன் பார்வை
பட்டாலே
தென்றலில் தள்ளாடும்
தென்னங் கீற்றாகின்றேன்
நான்
12.எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்
13.தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது
14.கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்
15.உன் பாதம்
பட்ட நீரோ
என் பாதம்
தொட சிதறி
சிணுங்குதே
வெள்ளி கொலுசாய்
வெட்கத்தில்
16.உறக்கத்தை
தொலைப்பதும்
உன்னால்
உறக்கத்தில்
தொலைவதும்
உன்னால்
17.திறக்குமுன்
கதவை
மன அறைக்குள்
நுழைந்து விட்டாய்
அன்பெனும்
சாவி கொண்டு
18.இமைக்கா விழிகள்
உனக்காய் காத்திருக்கு
பல கவிதை பேச
19.விலகிய போதும்
விரட்டி வந்தே
வீழ்த்தி விட்டாய்
மீள முடியா
அன்பு கடலில்
20.அடைக்கப்பட்ட அறைக்குள்
அகப்பட்ட பறவையாய்
சிக்கி கொண்டாலும்
மனம் சிறகடித்தே
பறக்குது
21.மறைந்து கொண்டு
தேட சொல்லும்
குறும்பு குழந்தையாய்
உன் தேடலுக்காக
நான்
22.உன் மூச்சிலும்
உயிரிலும்
யார் வேண்டுமானாலும்
இருக்கலாம்
யாரும் இல்லாத
போது நான் இருப்பேன்
உனக்காக
23.நினைவுகளால்
கிள்ளி அழ வைத்து
கனவுகளால் தாலாட்டி
மகிழ வைக்க
உன் காதலால்
மட்டுமே முடியும்
24.முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல
25.என் சோகத்தில்
உன் மனம்
வாடுவதால்
அணிந்து கொள்கின்றேன்
புன்னகையெனும்
கவசத்தை
26.உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓர் சுகமே
உயிருக்குள் உனை
தினமும் சுமந்திருப்பேன்
ஒரு தாய் போல
27.உன் அழைப்புக்கு
காத்திருக்கும் ஒவ்வொரு
நொடியும் எனக்கு
அழகான தருணங்கள் தான்
28.காலங்கள் காத்திருப்பதில்லை
ஆனால் உன்னை
நேசிக்கும் உண்மையான
இதயம் உனக்காக
நிச்சயம் காத்திருக்கும்
29.கண்ணாடியில்
ஒரு பெண்
தன்னை ரசித்து கொள்ளும்
அழகை விட
காதலோடு தனக்கு
பிடித்தமான ஒருவர்
அவளை ரசித்து சொல்லும்
அழகு பேரழகு
30.காத்திருத்தல்
காதலில் சுகம் தான்
அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க வைத்துவிட்டாயே