தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை வரிகள் | Prabhakaran Motivational Quotes in Tamil
1.நான் பேச்சுக்குத் தருவது
குறைந்தளவு முக்கியத்துவமே.
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்..!
2. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தால்,
ஒரு சாதாரண மனிதனால் கூட
வரலாற்றை உருவாக்க முடியும்.
3. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை.
4. எமது போராட்டத்தின் வலிமை
எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
5. துரோகிகள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள்.
6. மலைபோல் மக்கள் சக்தி
பின்னால் இருக்கும் வரை
எந்த புதிய சவாலையும் சந்திக்க தயார்.
7. வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
வரலாற்றைப் படைக்க முடியாது.
8. ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.
9. மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
10. "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."
11. உயிர் பறிக்கும் சையனைடுதான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்
12. ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்.
13. நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.
14. சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.
15. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்
16. பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.
17. சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.
18. நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.
19. இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
20. மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
21. விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.
22. சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.
23. ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.
24. ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.
25. எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.
26. விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.
27. நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.
28. நாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள்
29. விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.
30. அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.
31. குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
32. நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச்சின்னம் தான் ‘சயனைட்” இந்த ‘சயனைட்” எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
33. ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.
34. போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
35. மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.