சாய்பாபா | Sai Baba Motivational Quotes in Tamil
1.நோய்,
வறுமையில் வாடுவோருக்கு
உதவி செய்வதன்மூலம்
கடவுளின் அன்புக்குப்
பாத்திரராக முடியும்.
2.ஆரோக்கியமான
வாழ்வை உறுதிசெய்ய
மனதை மகிழ்ச்சியோடு
வைத்திருங்கள். கவலை,
அவசரம், பயம்,
தயக்கம் போன்றவற்றால்
அலைக்கழிக்கப்படாமல் இருந்தால்
உடல் ஆரோக்கியமாக
இருக்கும்.
3.கடின உழைப்பின் மூலம் பெறப்படும் பொருளே நிலைத்து நிற்கும்.
4.கோபம்,
பொறாமை, ஆணவம்
மிகவும் மோசமான
நோய்கள். அவற்றிலிருந்து
நீங்கள் விலகியே
இருங்கள்.
5.இந்த
உலகில் ஒரு
மதம் மட்டுமே
உள்ளது.
அது அன்பு
மதம்.
ஒரே மொழி
மட்டுமே உள்ளது.
அது இதயத்தின்
மொழி.
6.உயர்ந்த கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழுக்கள் வரை அனைத்து உயிரிடத்தும் உயர்வு, தாழ்வு கருதவேண்டாம்.