அரிசி என்றாலும் | தமிழ் தத்துவம்| Tami Thathuvam 1
1.அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்
2.அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்
பல வலிகளை கொடுத்ததும் முகநூல்...
3.வானிலையைவிட அதி
வேகமாய் மாறுகிறது
மனிதனின் மனநிலை...
4.காப்பாற்ற வேண்டிய
நேரங்களில் ஓய்வெடுக்க
போய்விடுகிறார் கடவுள்...
5.புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது...
பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது...
6.மனித மனங்களிலிருந்து மனிதநேயம்
மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில் இருக்கின்றது...
7.மனதை சுத்தப்படுத்த ஒருநொடி
போதும் அந்த ஒருநொடியை
செலவு செய்யத்தான் நமக்கு
மனமில்லை...
8.கஸ்டங்கள் கவலைகள் உனக்கு
மட்டும் தான் என்று புலம்பாதே
இங்கு சந்தோஷத்தை மட்டும்
அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை...
9.எங்கு உனக்கு
கேள்வி கேட்க
உரிமையில்லையோ
அங்கு நீ
அடிமைபடுத்தப்படுகிறாய்...
10.இதயத்தின் காயங்கள் எல்லாம்
இணையத்தில் கிறுக்கல்களாக...
11.அடுத்த நொடி
நமக்கு சொந்தமில்லாத போது
நீயா நானா என்ற
போட்டி பொறாமைகள் எதற்கு...
12.விதியை மதியால் வெல்லலாம்
என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்
பல நேரங்களில் விதிதான் வெல்லுது...
13.நம் பிரச்சனைக்கு
மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்.....
அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது
14.பூவோடு இருப்பதால் முள்ளை
யாரும் விரும்புவதுமில்லை.....
முள்ளோடு உள்ளதென்று பூவை
வெறுப்பதுமில்லை.....
15.உழைப்பவர்களின்
ஊதியமெல்லாம்
வியர்வையோடு கரைய
ஊழல் செய்கின்றவன்
வாழ்க்கை எல்லாம் மாடி வீடுகளாக
வளர்ந்துக்கொண்டிருக்கு