வெற்றியே நிரந்தரமல்ல எனும் போது | Tamil kavithai 4
46.எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாம்
எளிது தான்
மனமிருந்தால்
47.காலால் மிதித்த
தன்னை கையால்
எடுக்க வைக்கும்
பெருமை கொண்ட
முள்ளை போல
உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள்
புகழ்ந்து பேசும் வரை
உன் முயற்சியை
வடிவமைத்துக் கொள்
48.தடை
எவ்வளவுக்கு எவ்வளவு
பெரிதாயிருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு
அதை வெல்வதிலும்
பெருமையுண்டு
49.கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்
50.எதிர்த்து நிற்கும் துணிவை
பெற்று விட்டாலே போதும்
எத்துன்பமும் பறந்து விடும்
51.இருட்டில் இருந்துகொண்டு
விளைவுகளை பற்றி
சிந்திப்பதை விட
வெளிச்சத்தை சந்திக்க
முயற்சிசெய்
52.மூழ்கி விட்டாய்
என்று மற்றவர்கள்
எண்ணும் போது
முயற்சி கொண்டு
முத்தெடுத்து மேலேறி வாருங்கள்
கடலும் கை கொடுக்கும்
53.சாதிக்கும் துறைகள்
தான் வெவ்வேறே தவிர
சாதனை என்பது
எல்லா துறைகளிலும்
ஒன்று தான்
(கடின உழைப்பு)
54.வெற்றியே நிரந்தரமல்ல
எனும் போது
தோல்வி மட்டும்
என்ன விதிவிலக்கா
இ(எ)துவும் கடந்து போகும்
55.இன்றைய
அசமந்தபோக்கால்
நாளைய வெற்றிகள் கூட
தடைப்படலாம்
56.நாம மகிழ்ச்சியா இருந்தா
வாழ்க்கை நல்லா இருக்கும்
அதுவே
நம்மால் பிறரை மகிழ்ச்சியா
வைக்க முடிஞ்சா வாழ்க்கை
அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்
மகிழ்வித்து மகிழ்வோம்
57.நமது எண்ணங்கள்
மிகவும் வலிமையானது
அவற்றை
பூக்களைப் போல தூவினால்
அது நமக்கு
மாலையாகக் கிடைக்கும்
கற்களைப் போல எரிந்தால்
அது நமக்கு
காயங்களாகக் கிடைக்கும்
58.இதயத்தின்
துடிப்பை வைத்தே
குழந்தைகள்
கண்டுபிடித்து விடும்
தான் இருப்பது
அன்னையிடமா
அடுத்தவரிடமா
என்பதை
59.பிரிவு என்பது
நிரந்தரமாகாது
இருவரிடமும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால்
60.மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால் நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்
61.தொடவே முடியாத
தொலைவில் இருப்பதை
தொடுவானம் என்கின்றோம்
அருகில் இருக்கும்
வெற்றியை மட்டும்
தொலைவில் உள்ளது என்கின்றோம்
62.இழந்ததை
நினைத்து வருந்தாமல்
இனி இருக்கப் போவதை
நினைத்து நிம்மதியாய்
வாழத் தொடங்குங்கள்
63.யாரிடமும்
பேச வேண்டாம்
என மனநிலை
உருவாக காரணம்
அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்