விட்டுக் கொடுங்கள் | Tamil kavithai 2
16.விட்டுக் கொடுங்கள்
அல்லது
விட்டு விடுங்கள்
நிம்மதி நிலைக்கும்
17.தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே
18.ரசிப்பதற்கு
ஏதேனுமொரு விஷயம்
தினமும் கிடைத்துக்
கொண்டிருக்கும் வரை
வாழ்க்கை அழகானது
19.இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
20.மரக்கிளையில் வந்து
அமரும் பறவையாய்
அவ்வப்போது வந்து
செல்கிறது சந்தோஷம்
21.கரையும் மெழுகில்
இருளை கடந்துவிடமுடியும்
என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும்
இருக்கட்டும்
22.கற்றுக்கொடுப்பதில்
இலைகளுக்கும்
சிறு பங்குண்டு
வீழ்வது கூட அழகே
இலையுதிர் காலங்களில்
23.மரியாதை
வயதை பொறுத்து
வருவதில்லை
அவர்கள்
செய்யும் செயலை
பொறுத்து வருகிறது
24.தவறு செய்யாதவனையும்
நடுக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது
(குளிர்)
25.இசைக்கு
நினைவுகளைத் தூண்டும்
சக்தியுண்டு
சில சமயம்
வலிக்குமளவிற்கு...!
26.நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது
27.எல்லா உறவுகளையும்
மேலோட்டமாகப் பார்த்தால்
மிகவும் அழகாகத்தான் இருக்கும்
ஆனால் அதன் ஆழத்தில்
ஒருவிதகட்டுப்பாடு
இருந்தே தீரும்
28.கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடுதொடங்கும்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடுஅடங்கும்
29.ஆண்மையில்
தாய்மை பேரழகு
என்பதால் என்னவோ
காண்பதற்குஅரிது
30.கொடுப்பவரை
ஏழை ஆக்காமல்
பெறுபவரை
செல்வந்தன் ஆக்கும்
ஒரே செயல்
புன்னகை மட்டுமே...!