சில பேர் நமக்காக | தமிழ் அன்பு கவிதைகள் - 03 | Tamil Anbu Kavithai
25.அடங்கிப்போவதும்
அடிபணிவதும்
உன் அன்பிற்க்கு
மட்டுமே
26.சில பேர்
நமக்காக நிறைய
செய்வாங்க பட்
ஒன்னும் பண்ணாத
மாதிரி காட்டிப்பாங்க
அந்த அன்பு
என்ன விலை
கொடுத்தாலும்
வாங்க முடியாது
27.அன்பு என்பது
போர் செய்வது போன்றது
துவங்குவது சுலபம்
நிறுத்துவது கடினம்
28.அன்பு எனும்
எழுது கோலால்
மட்டுமே
வாழ்க்கை எனும்
பக்கங்களை
அழகாக்க முடியும்
29.உடைத்தெரிய
ஆயிரம் இருக்க
உயிர்த்தெழ ஏதாவது
ஒரு காரணத்தை
வைத்திருக்கிறது அன்பு
30.இப்பிரபஞ்சத்தின்
ஒற்றை நம்பிக்கையும்
ஒற்றைப் பேராசையும்
அன்பு மட்டும் தான்
31.எதிர்பார்ப்பு
இன்றி கிடைக்கும்
அன்பு பெருமழைக்கு ஈடானது
32.அன்பான உறவுகளின்
காயங்களுக்கு மருந்தாகவே
பயன்படுகிறது பாசம்
33.கொஞ்சம் அன்பு
கொஞ்சம் அக்கறை
பூர்த்தியாகும்
இப்பேரின்ப பெருவாழ்வு
34.கோபமும் ஒரு வகை
அன்பு தான்
அதை அனைவரிடமும்
காட்ட முடியாது
நெருங்கியவரிடம் மட்டுமே
காட்ட முடியும்
35.அறிவாக
பேசுபவர்களை விட
அன்பாக
பேசுபவர்களிடமே மனம்
அதிகமாக
பேச விரும்புகிறது
36.ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா
அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க
நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது