தாமதித்து தவிக்கவிடாதே | True Love Quotes in Tamil-05
121.அடம்பிடிக்கும்
குழந்தையாய்
அடங்க மறுக்கின்றது
உன் நினைவு
122.தாமதித்து
தவிக்கவிடாதே
தாங்காது
இதயம்
123.எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
124.காத்திருந்த
கனமான நிமிடமெல்லாம்
காணாமல் போனது
கண்கள் உனைக்காண
125.விலகாத அணைப்பு
மௌனங்கள் பேசும்
காதல் கரைகின்ற இரவில்
தொடர்ந்திட வேண்டும்
126.இரவை
பல வண்ணங்கள்
அழகாக்கி
கொண்டிருந்தாலும்
உன்னை காணும்வரை
என்மனம் இருளே
127.கரு மையும்
கவிதையாகும்
உன் கண்கள்
ரசித்தால்...!
128.பேச வந்த
வார்த்தையெல்லாம்
ஓசையின்றி போனது
உன் விழிமொழியில்
மயங்கி...!
129.என்னில் நீயாகி
உன்னில் நானாகி
நம்முள் நாமானோம்
130.எண்ணமெல்லாம்
நீயாக
வண்ணவுலகில்
நான்...!
131.நெற்றியில் நீ
திலகமிட
கண்ணங்களும்
சிவந்தது நாணத்தில்
132.உன்னில்
தொலைந்தபின்னே
புன்னகைக்கவும்
கற்றுக்கொண்டேன்
133.விண்ணில்
உலாவரும்
நிலவாய்
என்னுள் உலாவருகின்றாய்
நீ...!
134.என்னுலகமும்
முழுமையாகிறது
உன்னை அள்ளிக்கொள்ளும்
போது...!
135.மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு
என்னுயிர் வாழ...!
136.எதையும்
ஆள வேண்டுமென்ற
ஆசையில்லை
உன் அன்பில்
ஆழ்ந்திருக்க
வேண்டுமென்ற
ஆசையை தவிர
137.சோலையில்
பூத்ததல்ல
உதிர மனச்சோலையில்
பூத்தது மரணம்வரை
மலர்ந்திருக்கும்
காதல் மலர்
138.நினைவே
நீயானபின்
மனதுக்கு
ஏது ஓய்வு
139.கரையோடு
உரையாடும்
அலைப்போல்
கடலிருக்கும்வரை
தொடர்ந்திட வேண்டும்
நம் உறவும்...!
140.உனக்காக
தவிப்பதுதான்
காதலென்றால்
சுகமாக ஏற்றுக்கொள்வேன்
காலமெல்லாம்...!
141.கையளவு
இதயத்திலேயே
சுகமாக சுமந்திருப்பவனுக்கு
கரங்களில் மட்டுமென்ன
சுமையாகவா
தெரியபோகிறேன்
142.நீ சொல்லும்
மிஸ் யூவில்
தொலைகிறேன்
நானும்...!
143.அலங்கரித்த போதும்
ஒளியிழந்து போனேன்
உன் பார்வை
படாததால்...!
144.காண்பதற்கு
தடைபோட்ட போதும்
மனதுக்கு தாழ்போட
முடியவில்லை
உள்ளம் உன்னையே
நினைக்குது...!
145.மழைச்சாரலாய்
நீ அன்பை
பொழிய
வாழவேண்டுமென்ற
ஆசையும்
துளிர்விடுகிறது
146.தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
147.காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
148.உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...
149.கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
150.கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...