காற்றோடு கலந்து | Love and Life Quotes in Tamil-05
421.எனது
ஆயுள்ரேகையில்
மறைந்திருப்பதென்னவோ
உனது அன்புமட்டுமே
422.உன்னுலகுக்குள் எனையும்
அழைத்து செல்லும்
வித்தையேதும்
வைத்திருக்கின்றாய
மூச்சு காற்றில்
உன்னருகில் என்னுலகமும்
மறக்குதே எனக்கு
423.ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்
424.காற்றோடு கலந்து
காதலாகி கவியெழுத
தூண்டுகிறாய் எனையும்
தென்றலாக
நீ மோதி
425.சாய்ந்து கொள்ளும்
இடமெல்லாம்
உன் தோளின் மென்மை
நினைவெல்லாம் நீயாகி
426.மரணிக்கும் மலராய்
இருக்கும் எனக்கும்
தினமும் ஜனனத்தை
கொடுத்து கொண்டிருக்கிறாய்
அன்பில்
427.நெருக்கத்தின் நேசம்
இன்னும் பலநூறு
ஆண்டுகள் வாழ்ந்திடும்
ஆசையை தூண்டுது
428.இன்றுவரை
நான் எழுதி
முற்றுப்பெறாத
ஒரே கவிதை
உன் பெயர் மட்டுமே
429.காத்திருந்த தவிப்பெல்லாம்
காதலாகி கண்களையும்
மறைக்குது நாணம்
நீ கண்ணெதிரே வர
430.இருண்ட வான வீதியில்
அலங்கரிக்கப்பட்ட
தனிமையின்
தேவதை அவள்
431.இருளை பூசிக்கொள்ளும்
இரவாய்
மனதை சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் நீ
432.ஏதேதோ எண்ணங்கள்
நெஞ்சில் அலையாய்
எதுவும் விளங்காமல்
புன்னகைக்கிறேன்
வழிமாறும் பயணங்களில்
விழிமாறும் நிமிடங்கள்
433.நீயின்றி
நகர்ந்ததுண்டு
நாட்கள்
உன் நினைவின்றி
நகர்ந்ததில்லை
என் நாட்கள்
434.வானில்
நிலவில்லாத நாட்கள்
கூட உண்டு
என்னுள்
நின் நினைவில்லாத
நாட்கள் என்பதே இராது
435.உறங்கி கிடக்கும்
கண்களுக்குள்
கிறங்கி கிடக்கு
உன் நினைவு
உறங்காமல்
436.எனை தனிமைபடுத்த
கூடாதென நினைக்கும்
ஒரே ஜீவன்
உன் நினைவுதான்
நீயில்லாதபோது
ஓடோடி வந்து
விடுகிறது
437.கண்ணால் பேசியே
கற்று கொடுத்தாய்
என் கண்களுக்கும்
காதலிக்க
438.எட்டா தூரத்தில்
நீயென்றாலும்
உனை எட்டி
விடுகிறேன்
கற்பனையில்
உன்னருகில்
439.உன் காதலில் கரைகிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்
மொத்தத்தில்
உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்
440.உன் பார்வை
எனை தீண்டாதெனில்
என்னுள்ளமும்
ஒளியிழந்த விளக்கே
441.ஏதோ
யோசிக்க நினைத்து
உன்னை (சு)வாசித்து
கொண்டிருக்கின்றேன்
442.யாவும் வெறுமையென
வெறித்திருந்த பார்வையும்
ஜீவன் பெற்றது
உன்னால்
443.சத்தமின்றி விளையாடும்
உன் நினைவில்
நித்தம் சிறைப்பட்டுபோகுது
மனம் சுகமான கைதியாய்
444.சொல்லவந்ததை
சொல்ல முடியாமல்
போவதிலிருந்தே
துவங்குகிறது காதல்
445.கண்ணோடு
நீ கலந்ததிலிருந்து
கண்களும் அடிக்கடி
ரசிக்குது
கண்ணாடியில் என்னை
446.நிழலுக்கு
குடை பிடிக்கிறேன்
நீயில்லா இரவின்
தனிமையில்
447.எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க
448.நிஜமாய்
முன் செல்கிறேன்
நிழலாய்
பின் தொடர்ந்து வா
இடைவெளிகள் நம்மை
இணைத்தே வைக்கும்
449.காத்திருந்த
ரணமெல்லாம்
காணாமல் போனது
உன்னன்பின் கதகதப்பில்
450.புயல் பார்வையில்
சாய்ப்பதும் ஏனடா
உன் தென்றல்
பார்வையே போதுமே
நான் வீழ்ந்திட