Gowthama buddha inspirational words in tamil
கௌதம புத்தர் சிந்தனை வரிகள் - தமிழ்
Gowthama buddha inspirational words in tamil
கௌதம புத்தர் சிந்தனை வரிகள் - தமிழ்
Gowthama buddha inspirational words in tamil
கௌதம புத்தர் சிந்தனை வரிகள் - தமிழ்
1. பகைமையை
பகைமையினால் தணிக்க முடியாது , அன்பின் மூலம் மட்டுமே தணிக்க முடியும்.
2. மனதில் நினைப்பதை சொல்ல வேண்டும், இல்லையெனில் மௌனமாக இருப்பதே
சிறந்தது.
3. அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
4. சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வது விட, ஒரு நாள்
பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.
5. துன்பத்தை அழிக்க தூய்மையான வாழ்வு வாழுங்கள்.
6. முட்டாளின் தோழமைவிட ஒருவன் தனியாக வாழ்வதே மேல்.
7. பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகு சுலபம்.ஆனால் தன் குற்றத்தை
தானே அறிவதுதான் வெகு சிரமம்.
8. அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் , இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுப்பதில்லை.
9. நன்மையோ தீமையோ உனது செயலின் பயனை நீ அடைந்தே தீரவேண்டும்.
10. பயனில்லாத சொற்களை பேசுபவன் வாசமில்லாத மலருக்கு ஒப்பாவான்.
11. ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும்
வெல்லமுடியாது.
வெல்லமுடியாது.
12. சிலந்தி தன் வளைக்கும் மட்டுமே சுற்றுவதை போல மனிதன் தன்
ஆசைக்குள் மட்டுமே கட்டுண்டிருக்கிறான்.
13. போரில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வதை விட, மனதை வெற்றி கொள்வதே
சிறந்த செயல்.
14. விழுதல் என்பது வேதனை, விழுந்த இடத்தில மீண்டும் எழுதல்
என்பது சாதனை.
15. எந்த காலம் காயை கனியாக்குகிறதோ, அந்த காலம் கனியை அழுகவும்
செய்கிறது.