தமிழ் சிந்தனை பழமொழிகள் # 05
Tamil Proverb Quotes(PART 05)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 05
Tamil Proverb Quotes(PART 05)
1. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
2. கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
3. செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
4. நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
5. நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
6. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
7. எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
8. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
9. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
10. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.