தமிழ் சிந்தனை பழமொழிகள் # 08
Tamil Proverb Quotes(PART 08)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 08
Tamil Proverb Quotes(PART 08)
1. மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
2. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
3. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
4. எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
5. எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
6. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
7. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
8. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
9. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
10. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.