அம்மாவை பற்றிய அருமையான வரிகள் #1
Mother Inspirational Quotes in Tamil - Part 1
அம்மாவை பற்றிய அருமையான வரிகள் #1
Mother Inspirational Quotes in Tamil - Part 1
1. உயிர் எழுத்தில் "அ" எடுத்து
மெய் எழுத்தில் "ம்" எடுத்து
உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து
அழகு தமிழில் கோர்ந்தேடுத்த முத்து "அம்மா"
2.குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த அகராதி புத்தம் – அம்மா
3. மின்னல் மின்னும்போது அம்மாவை கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிகிறது 'அம்மா அதைவிட பெரிய சக்தி' என்று.
4. ஆயிரம் உருவுகள் அவனியிலே கிடந்தாலும் அன்னையின் உறவுக்கு ஈடாகுமா?
5. மழையில் நினைந்த என்னை எல்லோரும் திட்டிய போது தலையை துவட்டி விட்டு மழையை திட்டியவள் என் அம்மா...
6. சுவாசம் பெரும் முன்பே அவளின் பாசம் பெற்றுவிட்டேன்.. கருவறை என்னும் கோவிலில்..!
7. கூட பிறந்த அக்கா இல்லை என்று ஏங்காத பசங்களும் இல்லை.. கூட பிறந்த அண்ணன் இல்லை என்று ஏங்காத பொண்ணுங்களும் இல்லை.. ஏன்னா..? அண்ணன் இன்னொரு அப்பா..!! அக்கா இன்னொரு அம்மா..!!
8. வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்.. !!
9. ஆடம்பரமாய் கட்டித்தந்த வீட்டை விட, உன் சேலையில் கட்டித்தந்த வீடு தான் ஆனந்தத்தை தந்தது அம்மா..!!
10. கேட்க கூச்சபடுவான் என நினைத்து எல்லா உறவினர்கள் வீடுகளிலும் தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் "அம்மா"..