அம்மாவை பற்றிய அருமையான வரிகள் #2
Mother Inspirational Quotes in Tamil - Part 2
அம்மாவை பற்றிய அருமையான வரிகள் #2
Mother Inspirational Quotes in Tamil - Part 2
1. விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..
2. அளவு சாப்பாடு உள்ள பொழுதுகளில், புதிய காரணத்தை உருவாக்கி விரதம் இருந்து விடுவாள்.. அம்மா..!!
3. உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் அம்மா...
4. உலகில்த் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்.. "தாயின் கருவறை"
5. அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்.. அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்.. அவள் என்னை முத்தமிடும்போது சொல்ல நினைக்கிறேன்.. ஆனால் சொல்ல முடியவில்லை.. கடவுளே!! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு.. அவளை "அம்மா" என்றழைக்க..
6. நான் நேசித்த முதல் பெண்ணும் என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே அம்மா..!!
7. அம்மா "ஒவ்வொரு நாளும்" கவலைப்படுவாள்.. ஆனால் ஒருநாளும் "அவளைப் பற்றி" கவலைப்பட்டிருக்க மாட்டாள்..
8. முகத்தை காணும் முன்பே நேசிக்கத் தெரிந்தவள்.. அம்மா...!!
9. ஐயிரண்டு மாதங்கள் காத்திருந்தேன்.. உன் பிஞ்சு இதழ் முத்தத்திற்காய்.. என் செல்லமே.. அம்மா!!
10. அம்மா.. உன்னை நான் தெய்வம் என்று சொல்லமாட்டேன்.. ஏனென்றால், தெய்வமும் சில சமயம் என்னைக் கைவிட்டது.. நீயோ கருவறை முதல் கல்லறை வரை என்னைச் சுமக்கிறாய்...