அப்பாவை பற்றிய அருமையான வரிகள் #1
Father Inspirational Quotes in Tamil
அப்பாவை பற்றிய அருமையான வரிகள் #1
Father Inspirational Quotes in Tamil
1. என்னை பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தவள் என் தாய் என்றால்.. என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சில் சுமந்தவர்.. "என் அப்பா"
2. கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு.. கடவுளே கிடைத்தார் வரமாக.. என் அப்பா..
3. உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை.. ஆகையால் என் நெஞ்சில் சுமந்து தீர்த்து கொள்கிறேன்.. இப்படிக்கு அப்பா
4. பெரும்பாலும் அப்பா நமக்காக வாங்கி தரும் ஒவ்வொரு பொருளும், அவர் காலத்தில் அவருக்கு அது கிடைக்கப் பெறாதவையாகவே இருந்திருக்கும்..!!
5. மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் shave செய்வது தந்தையின் பாசம்.
6. அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு அப்பா..!!
7. ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் தாய்க்கு செய்..!! ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்..!!
8. வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!!
9. 'என்னிடம் காசு இல்லையம்மா' எனும் சொல்கேட்டு அழகாக தலையாட்டும் மகளின் புரிதல் தந்தைக்கு நரகம் தான்...
10. எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை.. ஆனால் எல்லா பிள்ளைகளுமே இலவரசர்களாகவும் இளவரசிகளாகவும் தான் வளர்க்கப் படுகிறார்கள்..!!