Relations Quotes in Tamil # 1
Relations Quotes in Tamil # 1
1. எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே, நீ விலகி நின்றாலும் அது உன்னை விரும்பிவரும்.
2. எவ்வளவுதான் நாம கத்திய பாசமா பிடிச்சாலும் அதுக்கு வெட்ட தான் தெரியும். அது போல தான் சில உறவுகளும்.. நாம எவ்வளவு பாசமா இருந்தாலும், அவங்களுக்கு நம்ம கஷ்டப்படுத்த மட்டும்தான் தெரியும்..
3. நேசித்த ஒன்று என்னை பிரிந்தது.. என்னை நேசிக்க புதியதாய் ஒன்று பிறந்தது
4. சொந்தங்கள் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கைத்துணை என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்து விட்டால் ஆணும் பெண்ணும் அத்தனை உறவுகளையும் உலகையும் வெல்லலாம்.
5. உறவில் வரும் அன்பை விட, அன்பால் வரும் உறவு உயிர் போன்றது..
6. தேவையற்ற பேச்சே உறவுகளை தொலைப்பதற்கு காரணம். பேச்சை அடக்கினால் உறவு நிலைக்கும்.
7. நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை.. நல்ல துணை இருந்தால் போதும்..
8. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை, கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை..
9. நினைத்த போது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாத போதும் உன்னை நினைத்து கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்..!
10. பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளைத் தக்க வைப்பதை விட உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது மேல்.. மனசாட்சி மட்டுமாவது கடைசி வரை கூட இருக்கும்..!!
11. தோற்று போனால் வெற்றி கிடைக்கும்.. அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்.. அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்.. துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.. பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்.. சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்.. நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்.. ஆகவே தோற்று போ, தோற்று போனால் வெற்றி கிடக்கும்..!!!
12. கோபத்தில் விலகி இருந்தாலும் தன்னால் நேசிக்கப் பட்ட உறவின் மனதை நோகடிக்காமல் பார்த்துக் கொள்ளும் உறவுகள் யாருக்கும் சுலபமாக கிடைப்பதில்லை..!!
13. தேடித் போய் பேசினால் அவமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் தொலைத்து விடுகிறோம் பல உறவுகளை...
14. உறவுகள் மனதில் சில உறுத்தல்களோடு சேர்ந்திருப்பதை விட சில நல்ல நினைவுகளோடு பிரிதலே சிறந்தது...
15. தேனுக்காக பூக்கள் மீது உட்காரும் பட்டாம்பூச்சி போலதான் சில உறவுகளும்.. தேவைக்காக நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.. வேலை முடிந்ததும் பறந்துவிடும்...