அம்மாவை பற்றிய அருமையான வரிகள் #3
Mother Inspirational Quotes in Tamil - Part 3
அம்மாவை பற்றிய அருமையான வரிகள் #3
Mother Inspirational Quotes in Tamil - Part 3
1. படுத்துக்கொண்டே சொர்கத்தை காணலாம்.. தலையணையில் அல்ல.. தாயின் மடியில்..!!
2. கற்காமலும் பிழை இல்லாமலும் குழந்தைகள் பேச கற்றுக் கொண்ட முதல் வார்த்தை.. அம்மா!!
3. புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"
4. வாழ்க்கையில் தியாகம் செய்பவர் தந்தை.. வாழ்க்கையையே தியாகம் செய்பவள் தான் தாய்..!!
5. வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. அம்மா..!!
6. வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. அம்மா..!!
7.எத்தனை முறை சண்டை போட்டாலும், தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ இந்த உலகினிலே..!
8. மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்.. என் அம்மா காலில் மிதி பட அல்ல.. என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக..!
9. அம்மாவின் அன்பு தோசை மாதிரி.. அப்பாவின் அன்பு தோசைக்கல் மாதிரி..!
தோசையின் ருசி தெரியும்.. தோசைக்கல்லின் தியாகம் தெரியாது..!
10. பிரம்மன் படைத்த அழகு சிற்பம் நீ.. அதற்கு உயிர் தந்த அன்பின் சிகரம் உன் தாய்..!
Semma enakku romba pidichchirukku vera leval kavithai
பதிலளிநீக்கு