Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 9

Best Life successful  Motivational Words in Tamil  # 9







Best Life successful  Motivational Words in Tamil  # 9

1. வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..!

2. உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.. மற்றவருக்கு நீ கெட்டவனாய் இருந்தால் அது உன் குற்றம் இல்லை.. கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே!! அது பார்க்கபடுபவன் பிழையல்ல.. பார்ப்பவன் பிழை..

3. நீ யாரா இருந்தாலும் பரவாயில்லை.. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.. நீ உறுதியாய் இருந்தால்..!

4. இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான்.. அது என்ன நினைக்கிறதோ, அதை நோக்கியே உன் வாழ்க்கை பயணம் அமைகிறது...!!

5. இது வரை கிடைத்திடாத ஒரு பொருள் உனக்கு வேண்டுமென்றால், இது வரை முயற்சிக்காத செயலை நீ செய்ய வேண்டும்..!

6. வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன..

7. வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது.. நீங்கள் அனுமதித்தால் தவிர..

8. நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.. தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்.. பின் தயங்காதீர்கள்..!!

9. முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை..!

10. எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பிக்கின்றன...
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content