Relations Quotes in Tamil # 05
Relations Quotes in Tamil # 05
1. விலகி போனாலும் விரட்டி வந்து அன்பு செலுத்தும் உறவுகள் கிடைக்கபெற்றவர்கள் பாக்கியசாலிகள்..!!
2. பிடித்தவர்கள் நிராகரிக்கும் போதே விலகி விடுங்கள்.. வெறுத்து விட்டால், வலி நமக்கே..!!
3. உரிமையோடு போடப்படுகின்ற சண்டைகள் கூட சில நேரங்களில் உறவே வேண்டாம் என்ற அளவுக்கு முடிந்து விடுகிறது..!!
4. உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாறலாம்..! அனால் யாரையும் ஏமாற்றாது..!
5. பெண்மை என்பது பெருந்தன்மை.. தெய்வம் கூட மன்னிக்க மறுக்கும் தவறுகளை தாய்மை மன்னிக்கும்..
6. உயிர் விட்டுப் போகும் வலியை விட உண்மையான உறவு விட்டுப் போகும் வலி கொடுமையானது..
7. உலகின் கொடிய நோய் உயிரை பிரிவது அல்ல.. உயிரானவரை பிரிவது..!
8. அன்பும் ஒரு நாள் தோற்றுபோகிறது.. அதன் மதிப்பு தெரியாதவரிடம் காட்டும் போது..!!
9. அன்பான உறவுடன் சண்டை என்றால், அந்த நொடியில் இருந்து அவர்களைத் தவிர வேறெதைப்பற்றியும் மனது நினைப்பதில்லை..!
10. எப்பொழுது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ.. அப்பொழுதே புரிந்துகொள் நீ அவர்கள் மீது உயிராய் இருக்கிறாய் என்று..!!
11. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு, பொருள் கொடு, உணவு கொடு, உடை கொடு.. உன் பெற்றோரை கொடுத்து விடாதே..!!
12. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு..!
13. வாழ்க்கை என்பது ஒரு முறை தான்.. அதனால் உடன் இருக்கும் உறவுகளிடம் கொஞ்சமாவது பாசமாகவும் அன்புடனும் நடந்துக் கொள்வோம்.. அவர்கள் இல்லாத பொழுது வருந்துவதில் பயனில்லை..
14. பிடிப்பதற்கு காரணம் இருந்தும் பிடிக்காமல் போகிறது சிலரை.. வெறுப்பதற்கு காரணம் இருந்தும் வெறுக்க முடியவில்லை சிலரை..
15. எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும் நாம் நேசித்த ஓர் இதயத்தை மட்டும் என்றுமே நம்மால் மறக்கவோ வெறுக்கவோ முடியவில்லையெனில், அது தான் உண்மையான அன்பு..!!