Relations Quotes in Tamil # 4
Relations Quotes in Tamil # 4
1. கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை கிடைக்கும்.. ஆனால் கடவுளே வேண்டுமென்றால் தான் பெண் குழந்தை கிடைக்கும்..!
2. உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? என்னய்யா இல்லை உன் கணவனையா?" என்று அப்பா கேட்ட கேள்விக்கு மகள் கொடுத்த அருமையான பதில் : "தெரில பா.. உன்னை பார்க்கும் போதெல்லாம் அவரை மறந்துடுறேன்.. அவரை பார்க்கும் போதெல்லாம், உன் நியாபகம் வருது.."
3. நீ இருப்பதால், யார் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறாரோ, அவர் அருகில் இருக்க பழகிக் கொள்!
4. அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அது தான் உண்மையான கடவுள்.. அம்மா..!
5. அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு..
6. ஒரு சில உறவுகளின் உண்மை சுயரூபம் தெரிய வரும் போது தான் புரிகிறது இவர்களையா உயிருக்கு மேலாக நேசித்தோம் என்று...
7. அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..
8. வாழ்க்கையில் அன்பான உறவு கிடைப்பது முக்கியம் அல்ல.. வாழ் நாள் முழுவதும் அன்பாக இருப்பதே முக்கியம்..!!
9. நினைவுகளை சுமந்து வாழும் பாசம், நிஜமான உள்ளங்களின் சுவாசம்..!
10. பெண்ணாக பிறப்பதே வரம் என்று அறிந்தாள்.. தன் குழந்தைக்கு தாயாகும் போது...
11. ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும்போது இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அந்த உறவைவிட இந்த உலகில் பெரிய உறவு இல்லை...
12. சேர்ப்பது மிகக் கடினம், செலவு செய்வது மிக எளிது.. பணம் மட்டும் அல்ல, உறவுகள் மனதில் நாம் சேர்த்து வைக்கும் நம்பிக்கையும் தான்..
13. பிடித்தவர்களுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுப்போம்.. சமயத்தில், அவர்களையும் தான்.. அவர்கள் விருப்பத்திற்காக..!
14. ஒவ்வொரு உறவுகளும் ஏதோ ஒரு அனுபவத்தை உணர்த்தி செல்கிறார்கள்...
15. பலரிடம் நெருங்கிய பிறகு தான் தெரிகிறது... தூரமே எவ்வளவு அழகென்று..!!
மேலும் இதுபோன்ற கவிதைகளை வரிகளை படிக்க 👇
பதிலளிநீக்குrelationship quotes in tamil