Type Here to Get Search Results !

Relations Quotes in Tamil # 06

                              Relations Quotes in Tamil # 06








Relations Quotes in Tamil # 06

76. எந்த உறவாக இருந்தாலும் அதில் நீ உண்மையாக பாசம் வைத்தால் மட்டுமே நீ விலகி நின்றாலும் அது உன்னை தேடி வரும்..!

77. கோபத்தில் உன் அன்பையும் மௌனத்தில் உன் வார்த்தைகளையும் எவர் புரிந்து கொள்கிறார்களோ அவர்களே உனக்காக படைக்கப்பட்ட உண்மையான உறவுகள்..!!

78. வலிக்காமல் குட்டுவது எப்படி என்பது தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்.. அதுப்போல் வலிக்காமல் வலித்ததுபோல் நடிக்க அண்ணன்களால் மட்டுமே முடியும்..!!

79. எல்லோருக்கும் நீ நம்பிக்கைக்குரியவனாக இரு.. ஆனால் யாரையும் நம்பி விடாதே.. ஏனென்றால் நீ உயிரினும் மேலாக நேசித்த உறவு கூட உன்னை விட்டு காரணம் இல்லாமல் பிரிந்து செல்லலாம்..!

80. மணல்வீடு, பட்டம், காகித பொம்மை.. இப்படி நான் எதைச்செய்தாலும் பக்கத்தில் உனக்கொன்று குட்டியாய் செய்ய சொல்லும் உன் இம்சைகள்...

81. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்து போகும்... ஆனால் அது போன்ற உறவுகள் நம்மோடு நீண்டகாலம் நிலைப்பதில்லை...

82. விளக்கங்கள் கொடுத்து கொடுத்து தக்க வைக்கும் உறவுகள் நீடிப்பதில்லை! அவை எனக்கு தேவையும் இல்லை..!

83. தேவைப்படும் போது பழகுவதும், தேவை இல்லாத போது எடுத்தெரிவதுமாக இருக்கும் வரை மனித உறவுகளுக்குள் ஏமாற்றங்களும் மனப்போராட்டங்குளும் தொடரத்தான் செய்யும்..!

84. உயிர் அறுபடும் நேரங்களை விட உறவு அறுபடும் நேரம் மிகக் கொடூரம்...

85. உலகத்தில் உனக்காக யாருமே இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் யாரோ ஒருவருக்கு நீயே உலகம்.. அவரோடு வாழ்ந்து பார்.. வாழ்கை இனிக்கும்..

86. மனம் திறந்து பேசு.. ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசாதே.. சிலர் புரிந்து கொள்வார்கள்.. பலர் பிரிந்து செல்வார்கள்..

87. நீ யாருக்காக வாழ்கிறாயோ அவருக்காக சிலவற்றை விட்டுக் கொடு.. உனக்கென யார் வாழ்கிறார்களோ  அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதே!

88. இறப்பு என்பது பெரிய இழப்பல்ல.. உறவுகளை இழந்து உயிருடன் இருப்பதுதான் பெரிய இழப்பு..

89. போலி அன்பு காட்டும் கோடி உறவு வேண்டாம்.. உரிமையோடு சண்டை போட்டாலும் உண்மை உறவு மட்டும் போதும் எனக்கு..

90. பார்த்து கொண்டிருக்கும் உறவை விட காத்துக் கொண்டிருக்கும் உறவுக்கு தான் பாசம் அதிகம்.

91. ஒரு தாய் தன பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம்.. பெற்றதற்காக அழக்கூடாது..

92. நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்.

93. அழகான பெண் மனைவியாய் வேண்டாம்.. மனைவி என்பதை அழகாக்கும் ஒரு பெண் போதும்.

Read More Related Post :-

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content