Relations Quotes in Tamil # 2
Relations Quotes in Tamil # 2
1. அம்மா அப்பா முக்கியம் தான்.. ஆனால் அதுக்காக மனைவியை ஒரு நாளும் விட்டு குடுத்து பேசக்கூடாது.. அவ அப்பா அம்மாவையே நம்மளுக்காக விட்டு வந்த உறவு..!!
2. அன்பு" யார் மீதும் காட்டலாம்.. ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்..
3. உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.. பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்.. உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள்.. உறவுகளை அன்புடன் நேசியுங்கள்.. அன்பை மட்டும் சுவாசியுங்கள்..!!
4. அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிரிந்து பெறவும் கூடாது.. பிறருக்கு கொடுக்கவும் கூடாது.. இரண்டுமே வேதனையைத் தான் தரும்..!!
5.தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...
6. அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்..!!
7. படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!
8. சேர்ப்பது மிகக் கடினம்.. செலவு செய்வது மிக எளிது.. பணம் மட்டும் அல்ல.. உறவுகள் உள்ளத்தில் நாம் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணமும் கூட..
9. உடலைப்பளந்து உயிர் கொடுத்த என் தாயை விடவா அந்த கடவுள் புனிதன்..!
10. மனைவியை மறக்க வைக்கும் தாயின் பாசத்தையும், தாயை நினைக்க வைக்கும் மனைவியின் அன்பையும் பெற்றவன் அதிர்ஷ்டசாலி...
11. முறைப்பொண்ணு மேல மஞ்சத்தண்ணி ஊத்தி விளையாண்ட மாரியம்மன் கோவில் விழா தான் உலகின் முதல் ஹோலிப்பண்டிகை..!!
12. ஒரு மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை முதலில் செத்துப் போவதுதான்...
13. அழுத்தி கொடுக்கும் அன்பு மகளின் ஆசை முத்தம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் தந்தை.. அன்னையை கண்டேன் மகளே உன் வடிவில்...
14. காதலனாக தோழனாக கணவனாக இல்லாமல் ஏதேனும் ஒரு பெண்ணிடம் அண்ணனாக பழகிப் பார்.. அந்த உறவு தரும் பாசமே வேறு...
15. அதீதப் பிரியம், பிறகு விலகல், கொஞ்சம் வெறுப்பு, பின் நன்றியுடன் நினைவுகூரல்... என்று ஒரு வட்டம் எல்லா உறவிலும் உண்டு...