Relations Quotes in Tamil # 3
Relations Quotes in Tamil # 3
1. பிரசவ வலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கும் பெண்கள்.. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அறிந்திருக்க மாட்டார்கள்..!!
2. சத்தமிட்டு சிரிக்க வைப்பதும், சத்தமேயில்லாமல் அழ வைப்பதும் ஒரு சிலரே..!!
3. சில உறவுகளிடம், பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது.. பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது..
4. 'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!
5. எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான்.. நாம் எப்படி பழகுகிறோமோ அப்படிதான் அதன் பிம்பங்களும்...
6. வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!
7. ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை...
8. எத்தனை முறை சண்டை போட்டாலும், தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ இந்த உலகினிலே..!
9. சிலரை ஏன் சந்தித்தோம் என்றும்
சிலரை ஏன் இவ்வளவு தாமதமாய் சந்திக்க நேர்ந்தது
என்றும் தோன்றுவதே வாழ்க்கை..
10. தகுதிக்கு மீறி ஆசை படாதே.. அதே போல் தன தகுதிக்கு கீழ் இறங்கி உன்னை ஒருவர் நேசிக்கும் போது தூக்கி எறியாதே..!
11. ஒரு ஏழை பணக்காரன் ஆகிவிட்டால், அவன், தனது உறவுகளை மறந்து விடுகிறான்.. ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால், அவனது உறவுகள், அவனை மறந்து விடுகின்றது.. இது தான் இன்றைய உலகம்.
12. நான் படுத்துரங்கியதிலேயே மிகவும் அழகான அறை என் தாயின் கருவறைதான்..
13. : நாம் தேடிச்செல்வோரை விட, நம்மை தேடி வருவோர் மீது அதிகம்
அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..
14. உறவு என்பது ஒரு கோவில்.
அதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை கழட்டிவைத்தல் நல்லது.
15. இதயம் என்பது ஒரு வினோதமான சிறைதான்! ஏனென்றால்... இதில் குற்றும் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. பாசம் வைபர்வர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள்!