Superb Thinking quotes in Tamil # 01
Superb Thinking quotes in Tamil # 01
1. இங்கே அந்நியர்கள் யாரும் இல்லை; நீங்கள் இதுவரை சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உள்ளனர். - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
2. உன் மரணம் எத்தனை பேருக்கு மீளாத் துயரைத் தருகிறதோ….அதை வைத்தே நீ வாழ்ந்தாயா, பிழைத்தாயா? என்பதை கணக்கிட முடிகிறது.
3. "சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"
4. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! - சேகுவாரா
5. அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது - அரிஸ்டாட்டில்
6. அமைதி மற்றும் நேர்மை ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். - ட்வைட் டி ஐசனோவர்
7. அறிவியல், மனித இனத்துக்கான ஒரு அழகான பரிசு; நாம் அதை சிதைத்து விடக்கூடாது. - அப்துல்கலாம்
8. அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். - அப்துல்கலாம்
9. அவசியமானவற்றை விருப்பமானவையாக மாற்றிக்கொண்டால், வெற்றி எளிதாக நம் பக்கம் வந்துவிடும். - மனதை வருடிய வரிகள்
10. ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது! - அப்துல்கலாம்
11. ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை. - அம்பேத்கர்
12. இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள்; நமது பயணத்தில் நாம் கண்டறியக்கூடிய சிறந்த விஷயம் நேர்மையான நண்பர்களே. - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
13. இந்த உலகம் மிகப்பெரிய மாடிப்படிக்கட்டு போன்றது, இதில் சிலர் மேலே போகிறார்கள் மற்றும் சிலர் கீழே போகிறார்கள். - சாமுவேல் ஜான்சன்
14. இப்போது ஒரு விரலின் கிளிக்கில் கிடைக்கும் தகவல் வளர்ச்சியானது என்னை வியக்க வைக்கின்றது. - அப்துல்கலாம்
15. இரும்பை அடிக்க அது சூடாகும்வரை காத்திருக்க வேண்டாம், அடிப்பதன் மூலம் அதை சூடாக்குங்கள். - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
16. உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - சுப்பிரமணிய பாரதி
17. உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டுமா? அப்படியானால் சிறைக்கு செல்லுங்கள். அங்குள்ள ஒரே குறை... சுதந்திரம் மட்டுமே. - ட்வைட் டி ஐசனோவர்
18. உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள். - தியோடோர் ரூஸ்வெல்ட்
19. உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணர்வீர்கள். - பில்லி கிரஹாம்