Superb Thinking quotes in Tamil # 02
Superb Thinking quotes in Tamil # 02
1. உண்மையான கல்வியை என்னவோ இன்னும் நம்மால் வகுக்க முடியவில்லை…. நான் எதற்கும் இலக்கணம் வகுப்பது இல்லை;
ஆனால் அதை ஒருவாறு கூறலாம் - உண்மையான கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல;
அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது. - விவேகானந்தர்
2. உலகம் நகர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை சொல்லப்பட்ட நல்ல கருத்துகள் எப்போதுமே நல்ல கருத்துகளாக இருப்பதில்லை. - ட்வைட் டி ஐசனோவர்
3. உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! - அம்பேத்கர்
4. எங்காவது இருக்கும் அநீதி, எல்லா இடங்களிலும் இருக்கும் நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. - மார்டின் லூதர் கிங்
5. எங்கு துயரம் புதியதாக இருக்கின்றதோ, அங்கு அதை திசை திருப்பும் எந்த முயற்சியும் எரிச்சலடைவதில் மட்டுமே முடியும். - சாமுவேல் ஜான்சன்
6. எடுத்த முடிவு சில காலத்திற்குப் பின்னர் தவறாகப் படின், நீங்கள் கூடுதல் அனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்கள். - மனதை வருடிய வரிகள்
7. எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகின்றது. - சாமுவேல் ஜான்சன்
8. எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்! - அப்துல்கலாம்
9. எந்த சிறந்ததை நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததோ அதையே கற்றுக் கொடுங்கள். - ரிச்சர்ட் பாக்
10. எந்த மனிதனும் பயனற்றவன் இல்லை, அவனுக்கு ஒரு நண்பன் இருக்கும்போது. - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
11. என்னைப் பொறுத்தவரை, மக்களில் இரண்டு வகைகள் உள்ளனர்; இளமையானவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள். - அப்துல்கலாம்
12. எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம். - ஜோசப் அடிசன்
13. எப்பொழுது மாறுதலில்லாத நிலையினை கொண்டிருக்கிறீர்களோ, அப்பொழுது நிச்சயமான சில தடைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். - ட்வைட் டி ஐசனோவர்
14. ஒரு கொடுங்கோலன் இறக்கும்போது அவனுடைய கட்டளைகள் முடிந்துவிடுகின்றது; ஒரு தியாகி இறக்கும்போது அவருடைய கட்டளைகள் தொடங்குகின்றது - சோரென் கீர்கேகார்ட்
15. ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப் படுகின்றது. - ஜார்ஜ் எலியட்
16. ஒரு நல்ல நண்பன், நீங்கள் உங்களுக்கே கொடுத்துக் கொள்ளக்கூடிய பரிசு. - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
17. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்! - அப்துல்கலாம்
18. ஒவ்வொரு நாளைய பொழுதும் இரண்டு கைப்பிடிகளைக் கொண்டதாகவே வருகின்றது; ஒன்று கவலை, மற்றொன்று நம்பிக்கை. - ஹென்றி வார்டு பீச்சர்
19. ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள், ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள். - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
20. கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது, ஒன்று பெற்றுக்கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்குமே. - பில்லி கிரஹாம்