Superb Thinking quotes in Tamil # 03
Superb Thinking quotes in Tamil # 03
1. கடின முயற்சிக்குப் பின்னர் கிடைக்கும் வெற்றியே வாழ்வில் மகத்தானதாக கருதப்படுகிறது. அதை ஒரு போதும் மறக்க முடியாது. - மனதை வருடிய வரிகள்
2. கடினமாக உழையுங்கள்,
உறுதியாக இருங்கள், இறைவனில் நம்பிக்கை வையுங்கள், …’பாமர மக்களின் மத உணர்வுக்கு ஊறுசெய்யாமல் அவர்களை உயர்த்துதல்’ – இந்தக் குறிக்கோளை உங்கள் முன் வைத்துக் கொள்ளுங்கள். - விவேகானந்தர்
3. கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. - ஸ்டீபன் கோவே
4. கலையின் நோக்கம் வெளிப்புற விஷயங்களை பிரதிபலிப்பதல்ல, உள்ளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. - அரிஸ்டாட்டில்
5. கல்வி என்பது, வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல; அது நெருப்பை பற்றவைக்கும் விஷயம் போன்றது. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
6. காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே! - அப்துல்கலாம்
7. சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன. - அப்துல்கலாம்
8. சிரமங்களோடு போராடி அவற்றை கைப்பற்றுவதே மனிதகுலத்தின் மிக உயர்ந்த வெற்றியாகும். - சாமுவேல் ஜான்சன்
9. சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனை சொந்தக் காலில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை. - விவேகானந்தர்
10. சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவன், பெரும்பாலும் அடிமையாகவே இருப்பான். - மனதை வருடிய வரிகள்
11. சூரிய ஒளியின் பிரகாசத்தை அனுபவிக்க வேண்டுமானால், கண்டிப்பாக நிழலின் குளுமையை விட்டுவிட வேண்டும். - சாமுவேல் ஜான்சன்
12. செயல்படுத்த முடியாத, தொடர்ந்து வரும் நாட்களில் பராமரிக்க முடியாமல், விருப்பம் குறைந்துபோகிற காரியங்களைத் தொடங்காமலிருப்பதே நன்று. - மனதை வருடிய வரிகள்
13. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது, அந்த செயலை முழுமைபெற வைக்கின்றது - அரிஸ்டாட்டில்
14. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான். - பெர்னாட்ஷா
15. சேகுவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான். - சேகுவாரா
16. சொல்ல முடியாத விஷயங்களையும், அமைதிக்கு சாத்தியமற்ற விஷயங்களையும் இசை வெளிப்படுத்துகின்றது. - விக்டர் ஹியூகோ
17. சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினாலென்ன? நின்றாலென்ன?
- மனதை வருடிய வரிகள்
18. ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! - அம்பேத்கர்
19. தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். - புத்தர்
20. தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது! - அப்துல்கலாம்