Superb Thinking quotes in Tamil # 04
Superb Thinking quotes in Tamil # 04
1. தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். - புத்தர்
2. தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள். - அப்துல்கலாம்
3. தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும். - விவேகானந்தர்
4. தனித்திறன் என்பது செயல் அல்ல, அது ஒரு பழக்கம் - அரிஸ்டாட்டில்
5. தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி! - பெர்னாட்ஷா
6. திட்டமிடுவதற்கு கடினமானதாக இருக்கும் பல விஷயங்கள், செயல்படுத்துவதற்கு எளிதானதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. - சாமுவேல் ஜான்சன்
7. தீயவற்றின் விதையை அழித்துவிடுங்கள் இல்லையென்றால் அது உங்களின் அழிவு வரை வளர்ந்துவிடும். – ஈசாப்
8. தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை. – அப்துல்கலாம்
9. தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த பண்பு இதுவே - அரிஸ்டாட்டில்
10. தோல்வி உறுதி என்றால் போர்க்களம் போகாதே! சமாதானம் பேசிவிடு, நேரமும் ஆயுதங்களும் சேமிப்பாகிவிடும். - மனதை வருடிய வரிகள்
11. தோல்வி, அவமானத்தின்போது மட்டுமல்ல, வெற்றியின்போதும் தனிமையைத் தேடுங்கள். அதுவே உங்களை உங்களாக்கும். - மனதை வருடிய வரிகள்
12. நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய அறியாமையைப்பற்றி அறிவான். - விக்டர் ஹியூகோ
13. நமக்குப் பிடித்த ஒன்று எதிர்பாராமல், எவ்வித முயற்சியும் செய்யாமல் கிடைத்துவிடும்போது, அதை அதிர்ஷ்டம் என அழைப்பதில் தவறில்லை. - மனதை வருடிய வரிகள்
14. நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்! - அப்துல்கலாம்
15. நம் நாட்டுப் பெண்கள் மேலைநாட்டுப் பெண்கள் போன்ற அறிவு பெற வேண்டும்; ஆனால் அதற்காக தூய வாழ்வை இழக்க வேண்டும் என்றால் அந்த அறிவு தேவையில்லை. – விவேகானந்தர்
16. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. - அப்துல்கலாம்
17. நம்மால் சிறப்பாக செய்ய முடிகிற செயலை இன்னொருவன் ஏனோதானோவென்று செய்து முடித்து, பேர் வாங்கிச் செல்லும்போது, அவன் அதிர்ஷ்டக்காரன் என அங்கலாய்ப்பதைவிட, நாம் முயற்சிக்கவில்லை என்கிற மெய்யை உணர்ந்துகொண்டால், ஜெயம் உண்டாகும்.
18. நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, உங்களால் இந்த நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும். - ஜான் எஃப் கென்னடி
19. நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை - அம்பேத்கர்
20. நாம் அமைதியை பெறுவதற்காகவே போய்க்கொண்டிருக்கிறோம், அதற்காக சண்டைக்யிட்டுக் கொண்டாலும் கூட. - ட்வைட் டி ஐசனோவர்