Type Here to Get Search Results !

Superb Thinking quotes in Tamil # 05

                    Superb Thinking quotes in Tamil # 05






Superb Thinking quotes in Tamil # 05

1. நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்   - லாவோட்சு

2. நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!  - மனதை வருடிய வரிகள் 

3. நூலகம் என்பது ஆடம்பரமல்ல; ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று.  - ஹென்றி வார்டு பீச்சர்

4. பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல், கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.  - ஜோசப் அடிசன்

5. பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.  அப்துல்கலாம்

6. பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்  - விவேகானந்தர்

7. புத்தகம் ஒரு சிறந்த துணை; ஏனென்றால் வீண் பேச்சு இல்லாத முழு உரையாடலை தருகின்றது.  - ஹென்றி வார்டு பீச்சர்

8. புரட்சிகளை விட நாகரிகங்களே அதிக தீமைகளை செய்துள்ளன.   - விக்டர் ஹியூகோ  

9. பைத்தியக்காரத்தனத்தின் கலவை இல்லாத ஒரு சிறந்த மேதை எவருமில்லை  - அரிஸ்டாட்டில்     
                   
10. பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.  - ராபர்ட் கிரீன் இங்கர்சால்       
                 
11. பொய்யனை ஒருபோதும் யாரும் நம்பப்போவதில்லை, அவன் உண்மையே பேசினாலும் கூட.  ஈசாப்

12. பொருளாதாரம் சைவமாக மாற என்னை கட்டாயப்படுத்தியது, ஆனால் இறுதியாக நான் அதை விரும்பத் தொடங்கி விட்டேன்.  - அப்துல்கலாம்  

13. போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது, நான் எப்போதும் கண்டறியும் ஒரு விஷயம், திட்டங்கள் பயனற்றவை என்பதே. ஆனால் திட்டமிடல் தவிர்க்க முடியாதது.  - ட்வைட் டி ஐசனோவர்

14. போர் மனிதகுலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன், மனிதகுலம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  - ஜான் எஃப் கென்னடி     

15. போலியான வாக்குறுதி நம்பிக்கை துரோகத்தின் மறு வடிவம்.  - மனதை வருடிய வரிகள் 

16. மகிழ்ச்சியாக இருக்கும் கலையானது, பொதுவான விஷயங்களில் இருந்து மகிழ்ச்சியை பிரித்தெடுக்கும் சக்தியில் உள்ளது.   - ஹென்றி வார்டு பீச்சர்

17. மக்களின் தலையில் கொட்டிக்கொண்டிருப்பதன் மூலமாக அவர்களை உங்களால் வழி நடத்த முடியாது. அதற்குப்பெயர் தாக்குதலே தவிர தலைமைப்பண்பல்ல.  - ட்வைட் டி ஐசனோவர்        

18. மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையைவிட பெரிதாகவே காட்டும்  - கலீல் ஜிப்ரான்     
           
19. மனிதன் இறக்கலாம், நாடுகள் உயரலாம் மற்றும் தாழலாம், ஆனால் ஒரு திட்டம் தொடர்ந்து வாழும்.  - ஜான் எஃப் கென்னடி      
                  
20. மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கிறான்.  பெர்னாட்ஷா

Read More Related Post :-

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content