Superb Thinking quotes in Tamil # 10
Superb Thinking quotes in Tamil # 10
1. உற்சாகமற்ற உண்மை ஒரு பரபரப்பான பொய்யினால் மறைக்கப்பட்டு விடலாம். - ஆல்டஸ் ஹக்ஸ்லி
2. உழைக்காமல் வாழ்பவன் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவன். – ரஸ்கின்
3. ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?
- கவிஞர் கண்ணதாசன்
4. எது செய்து முடிக்கப்பட்டதோ, அதை ஒருபோதும் மாற்ற முடியாது. - வில்லியம் ஷேக்ஸ்பியர்
5. எதை விவரிக்க முடிகின்றதோ அது கவிதை அல்ல. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
6. எதைப் பார்க்கத் தயாராக இருந்தார்களோ, அதை மட்டுமே மக்கள் பார்க்கின்றார்கள். - ரால்ப் வால்டோ எமர்சன்
7. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் - மகாத்மா காந்தி
8. எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களிடம் விழிப்பாய் பழக வேண்டும். - கவிஞர் கண்ணதாசன்
9. எந்த பிரச்சினையும் இல்லாத மனிதன், வாழ்க்கை என்னும் விளையாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டவனாகிறான். - எல்பர்ட் ஹப்பர்ட்
10. எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை. - மனதை வருடிய வரிகள்
11. எப்படி நேசிப்பது என்பது தெரியும்வரை, எப்படி வழிபாடு செய்வது என்பது தெரியாது. - ஹென்றி வார்டு பீச்சர்
12. எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட முக்கியமாகின்றதோ அதுவே அன்பு. - எச். ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
13. எப்போதும் ஏற்படாத எதோ ஒன்றிற்கான நீண்ட தயாரிப்பே வாழ்க்கை. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
14. எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
15. எல்லாவற்றையும் கொடுப்பது, எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது அனைத்தும் அன்பே. - சோரென் கீர்கேகார்ட்
16. எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். - வில்லியம் ஷேக்ஸ்பியர்
17. எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால்
நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. - ஜேம்ஸ் ஆலன்