நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 01
Best Feeling Excited Quotes in Tamil - Part 01
நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 01
Best Feeling Excited Quotes in Tamil - Part 01
1. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!.
2. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
3. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
4. நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!
5. 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..
6. பணமில்லாதவனை விட புன்னகையில்லாதவன் தான் உண்மையில் ஏழை.. உங்களிடம் இருக்கும் ஒன்றை பரிசளியுங்கள்..!!
7. நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
8. முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன் இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்
9. இங்கு, மீசையில்லா பாரதியும் உண்டு! மீசையுள்ள அன்னை தெரசாவும் உண்டு! புரட்சி ஆண்களால் மட்டுமே செய்ய முடிந்ததும் அல்ல !! அன்பு பெண்களால் மட்டுமே தர முடிந்ததும் அல்ல !! ஆணுக்குள்ளும் மென்மை உண்டு! பெண்ணுக்குள்ளும் வீரம் உண்டு!!
10. பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!
11. பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!
12. படிச்ச நாம தான் அறிவாளினு மட்டும் நினைக்கூடாது. நமக்கெல்லாம் ஒளியை தந்த தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது வெறும் மூன்று மாதங்கள் தான்..
13. நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!
14. அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது..!!
15. முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்...
16. பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
17. வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அதற்கு அவமானம் தெரியாது.. விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
18. கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.. மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.. அழுகையில் ஒருவரையும் நம்பாதே..!
19. அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும், நம் வாழ்க்கை என்ற கால்கடிகாரத்தில் நிரந்தரமாக அமைவதில்லை..
20. இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள் மேல அம்முட்டு நம்பிக்கை..!!