நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 03 - Superb inspirational Quotes

Breaking

Wednesday, 14 November 2018

நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 03

நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 03

நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 03

1. வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும்.. யாரையும் நம்பித்தான் இருக்கக்கூடாது..!

2. நீ நினைப்பது போல் உன் நிழல் கூட நடப்பதில்லை.. பிறகு ஏன் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறாய்...

3. ஒருமுறை மட்டும் வாழக்கிடைக்கும் வாழ்க்கை இது... வாழும் வாழ்க்கையை உனக்கு பிடித்த படியாக அமைத்துக் கொள்..!!

4. சாவதற்குள் எப்படியும் சம்பாதித்துவிட வேண்டியவை... உடலை சுமக்க நாலு பேர்.. உள்ளத்தில் சுமக்க ஒருவரையேனும்..!!

5. பேச்சைவிட மௌனமே சிறந்தது.. பேசித்தான் தீரவேண்டுமென்றால் அந்த பேச்சு உண்மையாய் நேர்மையாய் இனிமையாய் இருக்கட்டும்..!!

6. உன் கோபத்தால் என்னை தொலைத்து விடாதே !!! அன்புடன் புன்னகை

7. சாதிக்க வேண்டுமா? சாதியை விட்டுவிடு..!! மனிதனாக வேண்டுமா? மதங்களை விட்டுவிடு..!!

8. தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை.. விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை..!

9. உண்மையான அன்பைப்போல் சிறந்த மருந்து எதுவுமில்லை.. பொய்யான அன்பைப்போல் கொடிய விஷம் எதுவுமில்லை..

10. உண்மையான அன்பைப்போல் சிறந்த மருந்து எதுவுமில்லை.. பொய்யான அன்பைப்போல் கொடிய விஷம் எதுவுமில்லை..

11. மரத்தை வெட்டி விட்டு, அதில் செய்த விசிறியை வைத்து வீசிக் கொண்டு செல்கிறான்.. காற்றே வர வில்லை என்று..!!

12. வாழ்க்கை ஒரு கேள்வி, யாரும் விடை தர முடியாது..! மரணம் ஒரு விடை, யாரும் கேள்வி கேட்க முடியாது..!

13. பேசும் முன்னால் கவனமாகக் கேள்.. எழுதும் முன்னால் யோசிக்கத் தவறாதே.. செலவழிக்கும் முன்னால் சம்பாதிக்கப் பார்.. பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப் பார்..!!

14. அதிர்ஷ்டம் ஒருபோதும் முட்டாளை புத்திசாலி ஆக்குவதில்லை..!!

15. வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிக பெரிய விஷயம் பொறுமை.

16. மனிதன் மரணத்தை மறந்தாலும், மரணம் மனிதனை மறப்பதில்லை..!!

17. இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம்... இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது..

18. எல்லோருக்கும் பிடித்த மாதிரி நான் இருக்கணும்னு இறைவனிடம் வரம் கேட்டேன்... அவர் சிரிச்சுகிட்டே சொன்னார், "எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கல..!!"

19. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் சரிசமமாக ஏற்றுக் கொள்பவனே வாழ்க்கையில் இறந்தும் நிலைத்து வாழ்கிறான்..!!

20. மிருகத்திடம் அன்பாக பழகுங்கள்.. அதற்கும் மனித குணம் வந்து விடும்.. மனிதனிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்.. அவன் எப்போது வேண்டுமானாலும் மிருகமாகலாம்..!!

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post