நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04 - Superb inspirational Quotes

Breaking

Thursday, 15 November 2018

நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04

நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 04


நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 04

1. கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்.. கோபத்தை வீசியெறிய சிலரால்தான் முடியும்..!!

2. பாசத்துக்கு உயிரை கொடுப்பது சுலபம்..! ஆனால் உயிரை கொடுக்கும் அளவிற்கு பாசம் கிடைப்பது தான் கஷ்டம்..!!

3. வறுமை வந்தால் வாடாதே.. வசதி வந்தால் ஆடாதே..!!

4. தவறாக வேடுமானால் சிந்தியுங்கள். ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்..

5. ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது..

6. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்..

7. வானத்தில் மாளிகை கட்டு, தவறில்லை.. ஆனால் தரையில் அஸ்திவாரம் போடு..!!

8. உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம்.. உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது..!

9. பயிற்சி களத்தில் வியர்வை சிந்த யோசிப்பவன் போர்க்களத்தில் ரத்தம் சிந்த நேரிடலாம்..!

10. இறக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.. ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசி வரை சாதிப்பதில்லை..!!

11. மகான் போல நீ வாழ வேண்டும் என்றில்லை.. மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..

12. சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்

13. வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

14. உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது..!

15. சதுரங்கத்தில் கூட மந்திரிகள்நேர் வழியில் பயணிப்பதில்லை!!

16. திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது, அடக்கத்துடன் இருங்கள்.. புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது, நன்றியுடன் இருங்கள்.. அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொண்டது, எச்சரிக்கையுடன் இருங்கள்..!!

17. ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதறவிட்ட நமக்கு தெரியாது. அதை யெடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்!

18. கடனில்லாமல் நடந்து போறவனை விட, கடன் வாங்கி காருல போறவனுக்கு மரியாதை ஜாஸ்தி...

19. ஒரு கவனக் குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும்!! ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும்!! ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும்!!..

20. ஒரு கவனக் குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும்!! ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும்!! ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும்!!..

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post