நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 05
Best Feeling Excited Quotes in Tamil - Part 05
நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 05
Best Feeling Excited Quotes in Tamil - Part 05
1. அரைகுறையாக கிடைக்கும் வெற்றியை விட, முழுமையான தோல்வி எவ்வளவோ மேல்..
2. ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது.. தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள..!!
3. நாக்கு ஒரு தீ! ஆக்கவும் அழிக்கவும் வல்லது.. கவனமாக பயன்படுத்துங்கள்..
4. நாம் பெரிய மனிதர்களாக வேண்டும் என்ற அவசர முயற்சியில் சின்ன மனிதர்களாகிவிடுகிறோம்..!
5. காகிதம் - கசக்கும் போது குப்பையாய் பார்க்கிறோம். காசாக்கும் போது கடவுளாய் பார்க்கிறோம். நாமும் காகிதம் தான் குப்பையாவதும் கடவுலாவதும் நம் தரத்தை பொறுத்துதான்!..
6. வாழ்க்கை.. போகும் போதே என்னை ரசித்து கொண்டு போ.. திரும்பி வரமாட்டேன் உனக்காக..!
7. நல்லவனாய் இரு.. அனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே.. அதை விட முட்டாள்தனமான விஷயம் ஏதுமில்லை..
8. காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்கள மறந்திர்ரீங்க.. காதலிக்கும் போது உங்களையே மறந்திர்ரீங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க..!
9. அந்தந்த ஊர்காரர்கள் வழி சொல்லும் சுவாரஸ்யம்.. கூகிள் மேப்களில் ஒருபோதும் கிடைப்பதில்லை..
10. வாழ பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.. ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்..
11. வாழ பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.. ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்..
12. படித்தவனிடம் பக்குவம் பேசாதே.. பசித்தவனிடம் தத்துவம் பேசாதே!..
13. பேசுபவனை கவனிக்காதே.. பேச்சை கவனி.. பேச்சின் நீளம் அதன் மதிப்பை குறைத்து விடும்..
14. ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு.. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.. எளிதில் வெற்றி பெறுவாய்!
15. வெற்றிக்கு போராடும்போது 'வீண்முயற்சி' என்பார்கள்.. வெற்றி அடைந்து விட்டாலோ 'விடாமுயற்சி' என்பார்கள்..
16. பேச வேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது..!
17. சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..
18. நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!
19. ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!
20. மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..