Type Here to Get Search Results !

நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 06

நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 06

Best Feeling Excited Quotes in Tamil - Part 06








நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 06

Best Feeling Excited Quotes in Tamil - Part 06


1. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

2. மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

3. வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

4. ஆடம்பரம் என்ற மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் அழிவைக் கண்டன..!!

5. அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

6. மழலைகளிடம் தோற்றுப்போகும் போது ஏற்படும் சந்தோஷத்தை....எதிரிகளிடம் பெறும் வெற்றி கூட தது விடுவதில்லை...

7. அறிவுரையால் ஆளானவர்களை விட, அலட்சியத்தால் அழிந்தவர்கள் அதிகம்!

8. புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

9. புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

10. சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு.. வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும்..

11. வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

12. கலங்கிய நீரில் தெளிவான பிம்பங்களும், கலங்கிய மனதில் தெளிவான சிந்தனைகளும் பிறப்பதில்லை..

13. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

14. மரணபயம் வாழ்நாளை குறைத்து விடும்..

15. எப்பொழுதும் ஞாயமாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை.. ஏன்.. கடவுள் கூட எப்பொழுதும் ஞாயமாக இருப்பது இல்லை..

16. தவறான மனிதர்களால் தான் வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்று தர முடியும்!..

17. வாழ்க்கை என்பது ஒரு பயணம்.. ஓட்டப்பந்தயம் அல்ல..

18. இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் அன்பின் அருமையும் தனிமையின் கொடுமையும்..

19. யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள்.. ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..!!

20. கோடிக்கணக்கான் கற்பனைகள், லட்சகணக்கான முயற்சிகள், ஆயிரகணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒரு சில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்கு பெயர் தான் "வாழ்க்கை".

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content