மனதை நனைக்கும் மழை - கவிதை
Tamil Kavithai
மனதை நனைக்கும் மழை
Tamil Kavithai
Tamil Kavithai
இரண்டாம் பாட வேளையில்
அடித்த கனமழையால்
நின்றது ஆசிரியர் பாடங்கள்
மாணவர்கள் மழையை பார்த்ததும்
உற்சாகத்தில் மிதந்தனர்…
நான் மட்டும் சன்னலில் சரிந்தவாறே
எங்கள் வீட்டின்
நிலைமையை நினைத்தேன்
எத்தனை பாத்திரத்தைத்தான்
ஏந்துவாள் என் அன்னை
வீடெல்லாம் ஒழுகுமே...ஆம்
மழை மண்ணை மட்டுமல்ல
சிலர் மனங்களையும் நனைத்து விடுகிறது