அண்ணா சிந்தனை வரிகள் #01
Arignar Anna Inspirational Quotes in Tamil - Part 01
அண்ணா சிந்தனை வரிகள் #01
Arignar Anna Inspirational Quotes in Tamil - Part 01
1.ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் சமதர்மத்திற்கான
சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்."
2.பூமியிலே புரண்டு கோவிந்தா போடுவதும், வேல் குத்திக் கொண்டு
வேலாயுதா என்று சொல்வதும் பக்தி என்று சொல்லப்படுமானால், பக்தி என்ற சொல்லுக்குப் பொருள்
பைத்தியம் என்பதாக இருக்கவேண்டும் அல்லவா?"
3.சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம்
தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின்
அங்கங்கள் என்பது."
4.ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத்
தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்."
5.புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி
வரவேண்டும்."
6.ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி
இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்."
7.எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில்
உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்."