தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 05
Tamil Haiku Kavithai - Part 05
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 05
Tamil Haiku Kavithai - Part 05
Tamil Haiku Kavithai - Part 05
41.குழந்தை:
இருட்டில்
இருவர் செதுக்கிய சிற்பம்.
42.தாய் பாசம்:
இரும்பு
சிறையில்
இருந்துகூட
தப்பி விடலாம் - ஆனால்
அவள் விழி சிறையில் இருந்து தப்ப இயலாது.
43.முதுகு சவாரி:
இலட்ச ரூபாய் நாற்காலியும்
தோற்றே விடுகிறது
தந்தையின்
முதுகு சவாரி !!
44.நிலா:
இவ்வளவு
கவிதையெழுதியும்
யாரிடமும்
வசப்படவில்லை
வானத்தின்
ஒற்றை நிலவு !!
45.பிரிவு:
உடல்களுக்கிடையே
தொலைவை
அதிகரித்து
மனங்களை
நெருக்கமாக்கும்
ஒரு பாலம்.
46.திருநங்கை:
உதாரணம்
பிரம்மனுக்கும்
மறதி
உண்டு
என்பதற்கு.
47.இனிமை:
உனது பேச்சு...
பாடுவதை
நிறுத்தி
கேட்கிறது
குயில்...!
48.சாய்ந்த கோபுரம்:
உன்னை தலை சாய்த்து பார்க்கும் போது தலை சுற்றிப்போனது...
சாய்ந்த
கோபுரம்...!
49.அழகி:
உன்னை பார்த்ததும் வாடியது,
சற்றுமுன்
பூத்த பூ..!
50.காதல்:
உன்விழிகள்
பேசியதால்
என் மொழிகள்
மௌனமானது...