தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 02
Humorous Quotes in Tamil - Part 02
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 02
Humorous Quotes in Tamil - Part 02
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 02
Humorous Quotes in Tamil - Part 02
11.அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா 'டோல் கேட்'னு சொல்றாங்க...
13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!
14.வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்...
15.யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது...
16.அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சு கூவுறது சேவல். பேரு வாங்குறது கோழி.. "கோழி கூவுது" !! - ஆண் பாவம்
17.இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!
18.சாப்பாட்டை எடுத்து வைத்து "என்னங்க" என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால், 'இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா' என்று அர்த்தம்..
19.உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!
20.இதுவும் கடந்து போகும்னு எனக்கு தெரியும்.. ஆனா இது ஏன் இவ்வளவு மெதுவா நடந்து போகுதுங்கிறது தான் பிரச்சனையே..!!