சாணக்கிய சிந்தனை வரிகள் #02
Chanakkiya Inspirational Quotes in Tamil - Part 02
சாணக்கிய சிந்தனை வரிகள் #02
Chanakkiya Inspirational Quotes in Tamil - Part 02
சாணக்கிய சிந்தனை வரிகள் #02
Chanakkiya Inspirational Quotes in Tamil - Part 02
11.நாவிலே பட்ட தேனையோ, நஞ்சையோ சுவைக்காமல் இருப்பது கடினம்.
அதைப்போல, ஆள்வோனுடைய செல்வத்தைக் கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பவன் ஒரு சிறிதளவேனும்
எடுப்பதினின்று தடுக்க முடியாது"
12.வீட்டிலே எதற்கெடுத்தாலும் சரி என்று சொன்னால் உங்கள்
தலையில் சுமைதான் கூடும். எது உங்களுக்குச் சரிப்படும், உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது
என்று யோசித்து அதைமட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றதை மறுத்து விடுங்கள்."
13.செல்வம் மட்டும் இல்லாதவன் ஏழையல்ல,அவன் நிச்சயமாகச்
செல்வந்தன். ஆனால் படிப்பில்லாதவன் எல்லா விதத்திலும் ஏழ்மை அடைகிறான்."
14.ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே
காக்க வேண்டும் ."
15.வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம்
வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும்போதும், துரதிஷ்டமான
காலத்திலும் அறியலாம்."
16.சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது."
17.கை நிறையக் காசு வைத்திருக்கிறவன் மட்டும் பணக்காரன் அல்ல,
நல்ல சிந்தனைத்திறன், கடினமான உடல் உழைப்பு, எப்போதும் உற்சாகமாக சிரித்தபடி வேலை பார்ப்பது,
நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது. இவை ஒவ்வொன்றும் பெரிய சொத்துக்கள்தாம்."
18.ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான். .ப்பினால் அல்ல."