அண்ணா சிந்தனை வரிகள் #02
Arignar Anna Inspirational Quotes in Tamil - Part 02
அண்ணா சிந்தனை வரிகள் #02
Arignar Anna Inspirational Quotes in Tamil - Part 02
8.பல கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது
தான் ஒவ்வொரு ஆட்சியின் சாதனையையும் ஒப்பிட்டு பார்க்க முடியும். இப்படி எல்லா கட்சிகளும்
மாறி மாறி ஆட்சிக்கு வருவதே ஜனநாயகம் ஆகும்."
9.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்”
“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”
10.ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள
கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? "
11.தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை
மாறி அவன் தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி
என்று உறவு கொண்டாட முடியும்."
12.தமிழர்கள் இந்துக்களல்லர். தமிழருக்குத் தனி நெறியுண்டு
என்றாலும் இவ்விரு மார்க்கங்களைத் (சைவம், வைணவம்) தமிழர்கள் தம்மை இந்துக்கள் என்று
கருதி வருகின்றனர்."
13.தமிழ் நெறியைவிட்டு ஆரிய நெறியாகிய இந்து மார்க்கத்தைக்
கொண்டு, தம்மை இந்துக்கள் என்று கருதிக்கொள்வதால், தமிழர்கள் தாங்கள் தனி இனம் என்பதை
மறந்து, இந்துக்களில் ஓர் பகுதி என்று எண்ணி தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர்."
14.ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள், எவ்வழி
உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.