தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 04
Humorous Quotes in Tamil - Part 04
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 04
Humorous Quotes in Tamil - Part 04
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 04
Humorous Quotes in Tamil - Part 04
31.மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா இல்லையா??.. "நம்பிக் கட்டினோம்.. நன்றாக இருக்கிறோம்..."
32.என்ன தான் பாத்து பாத்து 180cc ல போற பைக் வாங்குனாலும், அது எதையுமே பாக்காம 40cc ல போற ஸ்கூட்டி பின்னாடி தான் போகும்..
33.ஸ்மார்ட் போனால ஒரு நன்மை என்னன்னா... பசங்க/பொண்ணுங்க எங்க சுத்துனாலும் சாயங்காலம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துர்றாங்க.... சார்ஜ் போடணும்ல
34.புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி.. கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது.. நல்லா 'செட்டாக' விட்டுட்டு அப்பறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒன்னும் ஆகாது..!
35.வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.
36.மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.. பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..! ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!
37.ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!
38.எப்பவும் சார்ஜிலேயே இருக்குற என் ஆண்ட்ராயிட் போன பார்த்தா, ஆசுபத்திரில குளுகோஸ் எத்திட்டிருக்கிற பேஷன்ட் மாதிரி இருக்கு..
39.அந்த காலத்தில் சாப்பிட்டவுடன் வெத்தலை போடுவாங்க.. இந்த காலத்தில் சாப்பிட்டவுடன் மாத்திரை போடுறாங்க..!
40.நம்மள தினமும் ஊக்கபடுத்துறது 'பஸ் கண்டக்டர்' தான்.. "போ போ.. முன்னாடி போ.. நடுவுலே நிக்காதே.. முன்னாடி போ.. போய்டே இரு..!!"