தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 07
Tamil Haiku Kavithai - Part 07
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 07
Tamil Haiku Kavithai - Part 07
Tamil Haiku Kavithai - Part 07
61.அதிகாலை நிலா:
எந்தக்கோலத்தை
பார்க்க
இன்னும்
காத்திருக்கிறது
அதிகாலை
நிலா !!
62.சிகரெட்:
எனக்கு நானே
எரிக்கும்
உடன்கட்டை...
சிகரெட்...!
63.வாக்கு மூலம்:
என் அதிகாலை தூக்கத்தை கெடுத்தவனை கொன்றுவிட்டேன்.
கொசுவை கொன்ற குழந்தையின் வாக்குமூலம்.
64.மழை:
என் மீது விழுந்த
இம்மழைக்கு
மரம் நட்டது யார் ? !!
65.காலண்டர்:
என்னை அலட்சியமாக கிழித்து எறிந்து...
உனது லட்சியத்தில் ஒரு நாளை குறைத்து கொள்கிறாய்...
66.காதலி:
என்னோடு
எழுந்து என்னோடு உறங்கும் என் உயிர் காதலி
என் கைப்பேசி...!
67.சந்தோஷம்:
எப்போது
கால்நனைத்தாய்...
சந்தோஷத்தில்
துள்ளிக்
குதிக்கும் மீன்கள்...!
68.மன்னிப்பு:
எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
அம்மாவின்
இதயம்.
69.ஆடை:
ஏக்கத்துடன்
பார்த்தாள்
ஏழைப்பெண்...
கோவிலில்
அம்மனுக்கு
அழகான பட்டுப் புடவை...!
70.பசி:
ஏக்கத்தோடு
பார்த்தது
கன்றுக்குட்டி...
பால் கேனை...!