தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 06
Humorous Quotes in Tamil - Part 06
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 06
Humorous Quotes in Tamil - Part 06
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 06
Humorous Quotes in Tamil - Part 06
51.தடுக்கி விழுந்திட்டா ஓடிபோய் தூக்கிவிட்டது தாத்தா தலைமுறை..
கண்டுக்காம போனது அப்பா தலைமுறை..
நின்று போட்டோ எடுத்து கொண்டு இருப்பது நம் தலைமுறை..
#தலைமுறைகள்
52.எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்..
அதை தெரிந்து கொண்ட பெண்கள்
மளிகை கடைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
53."A Love" இது தமிழ்ல எழுதுனா... "எழவு"னு வருது..
உண்மைய சொல்ற "தமிழ் வாழ்க"..!!
54.மனுசனுக்கு வாழ்க்கைல ரெண்டே பிரச்சனைதான்
இருப்பவனுக்கு #சொத்து பிரச்சனை!!
இல்லாதவனுக்கு #சோத்து பிரச்சனை!!
55.பத்து பேர் வேலைய ஒருத்தரே செஞ்சா அது தனியார் வேலை...
பத்து பேர் சேர்ந்து செஞ்சும் ஒரு வேலையும் நடக்கலைன்னா அது கவர்மென்ட் வேலை...
56.காதல் என்பது பனைமரம் மாதிரி.. ஏறினால் நுங்கு..! கீழே விழுந்தா சங்கு..!!
57.ஒரு குறுப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள் நம்மை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பின்னர் நமக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்...
58.கவிதை எழுத வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் உடனே உன் முகம் தான் ஞாபகம் வருது... அப்பறம் எப்படி எழுதுறது.. பேப்பரும் பேனாவும் தூக்கி போட்டுருவேன்..!!
59.கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால் அது நட்பு..! இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல் இல்லை.. நெஞ்சுவலி..!! போய் நல்ல டாக்டரா பாருங்க..!
60.என்ன கொடுமை... காதலர் தினம் இருப்பதால் தானோ என்னவோ தெரியவில்லை பிப்ரவரி மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..!!