சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 10
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 10
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 10
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 10
92.அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும். -சுவாமி விவேகானந்தர்
93.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது - சுவாமி விவேகானந்தர்
94.சுயநலமின்மை சுயநலம் என்பவற்றை தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை..!-சுவாமி விவேகானந்தர்
95.நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது..! -சுவாமி விவேகானந்தர்
96.அன்புதான் உனது பலவீனம் என்றால் நீதான் இந்த உலகின் மிகப்பெரிய பலசாலி – சுவாமி விவேகானந்தர்
97.தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும்.-சுவாமி விவேகானந்தர்
98.தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும் – விவேகானந்தர்
99.சரியோ தவறோ இதயம் சொல்வதைச் செய் ஏனென்றால் விளைவுகளை தாங்கும் சக்தி அதற்குதான் உண்டு – விவேகானந்தர்
100.இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.- சுவாமி விவேகானந்தர்