சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 11
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 11
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 11
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 11
101.மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை இலக்காக கொண்டு முன்னேறுங்கள்.-சுவாமி விவேகானந்தர்
102.நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வது தான்.-சுவாமி விவேகானந்தர்
103.இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.
104.வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.-சுவாமி விவேகனந்தர்
105.ஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில் சிறந்தவன். - சுவாமி விவேகனந்தர்
106.கைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத் தான். பட்டினியாய்க் கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்கு கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன் முழுமை பெற்று முடிவில் கடவுளாகிறான். - சுவாமி விவேகனந்தர்
107.எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே. - சுவாமி விவேகனந்தர்
108.வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யா ராலும் முடியாது. - சுவாமி விவேகனந்தர்