தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 14
Tamil Haiku Kavithai - Part 14
Tamil Haiku Kavithai - Part 14
131.நெகிழி:
நாளைய தலைமுறைகள்
இன்றே சபிக்கப்படுகிறார்கள்
புதைப்படும்
நெகிழி !!
132.சாதனை:
நிமிர்ந்து
நின்றது புல்
வளைத்துக்
காட்டியது
ஒரேயொரு
மழைத்துளி...!
133.வெயில்:
நிழல் தரும் மரங்கள்
எப்படித்
தாங்குமோ
வெயிலை...?
134.வியர்வை:
நீரூற்றியது
தோட்டக்காரன்...
வியர்த்திருக்கிறது
பூச்செடிகளுக்கு...!
135.ரியல் எஸ்டேட்:
-------------------
நெல்லு
விளையற பூமியில
கல்லு வெளஞ்சிருக்கு...
ரியல் எஸ்டேட்...!
136.விரதம்:
---------
பசி நிறைந்த
கழுதை தின்றது...
உண்ணாவிரத
சுவரொட்டியை...
137.சிறுமியின் கண்கள்:
-------------------------
பறக்கும்
பறவையோடு
சேர்ந்தே
பயணிக்கிறது
சிறுமியின்
கண்கள் !!
138.நாற்காலி:
------------
பறவைகள்
இளைப்பாற
தெருவெங்கும்
மின்கம்பிகள்
நாற்காலியாய்...!
139.சக்கரங்கள்:
---------------
பல முறை உரசியும்
பற்றிக்கொள்ளவேயில்லை
சாலையில்
சக்கரங்கள் !!
139.கடிகாரம்:
------------
பலருக்கு
ஓய்வு நேரம்
காட்டுகிறது
தான்
ஓய்வெடுக்காமல்.
140.ஏழ்மை:
-------
பள்ளிக்கூடத்திற்கு
செங்கல்
சுமக்கும்
சிறுமி.