Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 17

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 17

 Tamil Haiku Kavithai - Part 17




தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 17

 Tamil Haiku Kavithai - Part 17


Tamil Haiku Kavithai 161

Tamil Haiku Kavithai 162

Tamil Haiku Kavithai 163

Tamil Haiku Kavithai 164

Tamil Haiku Kavithai 165

Tamil Haiku Kavithai 166

Tamil Haiku Kavithai 167

Tamil Haiku Kavithai 168

Tamil Haiku Kavithai 169

Tamil Haiku Kavithai 170


 Tamil Haiku Kavithai - Part 17

161.கருணை:
   -------

மரங் கொத்திக்கும்
நிழல் தந்தது
மரம்...

162.மரம்:
   ------

மரங்கள் பஞ்சம்
மின் கம்பத்தில்
பறவைகள்.

163.கிளி ஜோசியம்:
   ------------------

மரத்தடியில் கிளி ஜோசியம்
வேடிக்கைப் பார்க்கும்
மரத்துக்கிளிகள்.

164.மரபலகை:
   ---------

மரம் வளர்ப்போம் பாடத்தை
கற்றுக்கொண்டனர்
மரபலகை மேலமர்ந்து !!




165.விதவை:
   -------

மலர் சூட
மலருக்கு தடை

விதவை...!

166.நீர்த்துளி:
   ---------------

மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை...!

167.மின்னல்:
   ----------

மழை போர்த்திய
வெண் திரையில்
பூமியின் அழகை
படம் பிடித்துச் செல்கிறது
மின்னல்.
168.ராகம்:
   -------

மழைபொழுதில் நாடோடி ராகம் பாடியாது தவளை

169.காகித கப்பல்:
   ------------------

மிதக்கும் கடல் கப்பல்
தோற்றுவிட்டது பிஞ்சு விரல்களின்
காகித கப்பலிடம் !!

170.முதுமை?:
   ----------

மின்சாரத்துக்கும்
வயதாகிவிட்டதோ...?

ஓல்(ட்)டேஜ் பிராப்ளம்...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content